››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

விஷேட படைப்பிரிவு வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

விஷேட படைப்பிரிவு வீரர்களின் வெளியேறல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

[2018/04/09]

மாதுரு ஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வெளியேறும் நிகழ்வு இன்று (ஏப்ரல்,09) முற்பகல் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்களும் கலந்து கொண்டார்.

மாதுரு ஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையின் இன்று இடம்பெற்ற வைபவத்தில் 48ஆவது ஆரம்ப பயிற்சிப் பாடநெறியை பயின்ற ஏழு அதிகாரிகளும் ஏனைய பதவி நிலைகளைச் சேர்ந்த 189 பேரும் பயிற்சிகளை நிறைவுசெய்து வெளியேறினர்.

இந்நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்களை, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்கா அவர்கள் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து ஜனாதிபதி அவர்களுக்கு விஷேட படைப்பிரிவு வீரர்களினால் கௌரவ அணிவகுப்பு மரியாதையளிக்கப்பட்டது. பின்னர், ஜனாதிபதி வீரர்களின் அணிவகுப்பினை பார்வையிட்டார். இதன்போது ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாதுகாப்பு படைகளின் பிரதாணி ஆகியோரினால் விஷேட படைப்பிரிவு வீரர்களுக்கு இலட்சினைகள் அணிவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய ஜனாதிபதி அவர்கள், சீருடையில் உள்ள இளம் வீரர்கள், கொண்டிருக்கும் ஒழுக்கத்தை பேணிக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தினார். அத்துடன் பல்வேறு தியாகங்களை புரிந்த பாதுகாப்புபடை வீரர்களையும் இதன்போது அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

பாடநெறியின் போது சிறப்பு தேர்ச்சி பெற்ற படை வீரர்களுக்கு சிறப்பு விருதுகளும் சான்றிதழ்களும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக பாரா ஜம்பிங், அங்கம்பொரா மற்றும் பிற தற்காப்பு கலைகள், போர்க்களம் மற்றும் போரிடும் உத்திகள் மற்றும் படைவீரர்களின் கலாச்சார நிகழ்வுகள் என்பன இடம்பெற்றன.

பின்னர், ஜனாதிபதி அவர்கள் மாதுரு ஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள ஒசு உயனவிற்கு (மூலிகை தோட்டம்) விஜயம் செய்தார், பின்னர் அவர் தனது வருகையை நினைவுகூறும் முகமாக மாதுருஓய இராணுவ பயிற்சிப் பாடசாலை வளாகத்தில் நாக மரக்கன்று ஒன்றை நட்டிவைத்தார். மேலும், ஜனாதிபதி அவர்கள், விஷேட படைப்பிரிவு வீரர்களினால் அணிவகுப்பு நேரில் பார்வையிட வருகை தந்திருந்த படை வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்துரையாடினார்.

விஷேட படைப்பிரிவானது, இராணுவத்தின் உயரடுக்குப் பிரிவுகளில் ஒன்றாகும். மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதி ஆண்டுகளில் அதன் உறுப்பினர்கள் தங்களின் விஷேட தனித்துவ தன்மையினை நிரூபித்துள்ளனர். குறிப்பாக அதன் நீண்டகால ரோந்து படை நடவடிக்கை பயங்கரவாதிககளுக்கு மிகுந்த அஞ்சத்தை கொடுத்தது.

இந்நிகழ்வில், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி, அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன, இராணுவ தளபதி, சிரேஷ்ட இராணிவ அதிகாரிகள், விஷேட படைப்பிரிவு வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     
     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்