››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜப்பானிய கடற்படை கப்பல் இலங்கை வருகை

ஜப்பானிய கடற்படை கப்பல் இலங்கை வருகை

[2018/04/10]

ஜப்பானிய கடற்படைக்குச் சொந்தமான ஜேஎஸ் "அகிபொனோ" எனும் கடற்படை கப்பல் நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு திங்கள்கிழமையன்று (ஏப்ரல்,09) இலங்கையை வந்தடைந்தது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பானிய நாசகாரி கப்பலான ஜேஎஸ் "அகிபொனோ"வை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

குறித்த ஜப்பானிய கடற்படை கப்பலை, கடற்படை, கடலோர பாதுகாப்புப்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் குழுவுடன் இணைந்து தெற்கு கடற்படை பிராந்திய கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்கள் சுற்றிப்பார்வியிட்டதாகவும் கப்பலில் நடைபெற்ற தேடல் மற்றும் மீட்பு தொடர்பான மாநாட்டில் கலந்து கொண்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்