››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

நடுக்கடலில் நிர்கதியான வெளிநாட்டு கப்பலுக்கு கடற்படையினர் உதவி

நடுக்கடலில் நிர்கதியான வெளிநாட்டு கப்பலுக்கு கடற்படையினர் உதவி

[2018/04/17]

காலி கலங்கரை விளக்கிற்கு சுமார் 72 கடல் மைல் தூரத்தில் உள்ள கடற்பரப்பில் நிர்கதியான நிலையில் காணப்பட்ட சாண்டிடீ எனும் பெயர் கொண்ட வெளிநாட்டு கப்பலினை கரைக்கு கொண்டுவர இலங்கை கடற்படையின் உயர்தர ஆழ்கடல் ரோந்துக் கப்பலான சயுரள உதவி வழங்கியுள்ளது.

குறித்த இவ்வெளிநாட்டுக் கப்பல் இயந்திரக் கோளாறு காரணமாக ஆள் கடலில் நிர்கதியான நிலைக்கு ஆளாகியுள்ளது. இது தொடர்பாக இலங்கை கடற்படைக்கு தகவல் அறிவிக்கப்பட்டவுடன் குறித்த இடத்திற்கு இலங்கை கடற்படையின் உயர்தர ஆழ்கடல் ரோந்துக் கப்பலான சயுரள விரைந்து சென்று அவசியமான உதவிகளைப் புரிந்தது.

இவ்வாறு பாதுகாப்பாக காலி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட இக்கப்பல் மற்றும் அதன் குழுவினரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக தனியார் கப்பல் நிறுவனத்திடம் ஒப்படைக்கபட்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்