››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு அமைச்சில் சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள்

பாதுகாப்பு அமைச்சில் சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள்

[2018/04/18]

பாதுகாப்பு அமைச்சில் இன்று (ஏப்ரல்,18) இடம்பெற்ற பாரம்பரிய சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

குறித்த இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாதுகாப்பு செயலாளர், மலர்ந்துள்ள இப் புதுவருடம் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் மங்கள விளக்கினை ஏற்றி வைத்த பாதுகாப்பு செயலாளர், அமைச்சில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புதுவருட சிற்றுண்டி விருந்துபசார நிகழ்விலும் இணைந்து கொண்டு அமைச்சின் அதிகாரிகளுடன் சுவைத்து மகிழ்ந்தார்.

இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள், கடற்படைத்தளபதி, அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் அமைச்சின் சிவில் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     
     

மேலும் புகைப்படங்களை பார்வையிட >>



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்