››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மலைநாட்டு பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் சுகாதார வசதிகள் நிர்மாணம்

மலைநாட்டு பாடசாலை மாணவர்களுக்கு இராணுவத்தினரால் சுகாதார வசதிகள் நிர்மாணம்

[2018/05/03]

நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகல தமிழ் மகாவித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய சுகாதார வசதிகள் கொண்ட கட்டடம் மாணவர்களின் பாவனைக்கென அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அடிப்படை சுகாதார வசதிகள் கருதி நிர்மாணிக்கப்பட்ட குறித்த கட்டடம் இராணுவத்தினரால் இப்பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

பாடசாலையின் அதிபரினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய ஏழு கழிவறைகள் கொண்ட இப்புதிய சுகாதார கட்டடம் நிர்மாணிகப்பட்டது. மத்திய பாதுகாப்பு படைத்தலமையக படைப்பிரிவின் கீழுள்ள பொறியியல் சேவைகள் படையணியின் படைவீரர்கள் இப்பாடசாலையின் புதிய சுகாதார கட்டடம் நிர்மாணப்பணிகளுக்காக சுமார் 1.3 மில்லியன் ரூபா வினை அன்பளிப்பு செய்துள்ளனர்.

இப்புதிய சுகாதார வசதிகள் கொண்ட கட்டட கையளிப்பு வைபவத்தின்போது, மத்திய பாதுகாப்பு படைத்தலமையக சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

கடந்தவருடம் (2017), குறித்த பிரதேசத்திற்கு ஜனாதிபதி அவர்கள் விஜயம் மேற்கொண்டிருந்த போது பிரதேச மக்களினால் குறித்த பாடசாலைக்கு சுகாதார வசதிகள் அடங்கிய கழிவறைகளின் தேவைகள் குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கமைய சுகாதார வசதிகள் கொண்ட ஆறு கழிவறைகள் இராணுவத்தினரால் நிமாநிக்கப்பட்டு இப்பாடசாலைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சுகாதார திட்டத்தின் நிர்மாணப்பணிகளில் பொறியியல் சேவைகள் படையணியின் படைவீரர்கள் மற்றும் இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் 19 படைவீரர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். மேலும் இத்திட்டத்திற்காக சுமார் ஐந்து லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் புதிய நீர் இணைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இராணுவத்தினர் அதன் சமூக பொறுப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தில் இவ்வாறான பாரிய சமூக நலன்புரி திட்டங்களை முன்னெடுத்து வருவருகின்றனர். இவ்வாறான திட்டங்களினூடாக மக்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்துவதுடன், சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுமே இதன் நோக்கமாகும்.

மேலும், நாடுபூராவும் இராணுவத்தினர் மருத்துவ சேவைகள், கல்விக்கருத்தரங்குகள், புலமைப்பரிசில்கள் வழங்கல் மற்றும், மாணவர்களின் கல்வித்தரத்தினை உயர்த்தும் வகையிலான பல சேவைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவத்தினரின் இவ்வாறான சேவைகள் பரந்தளவில் புகழ் மற்றும் அங்கீகாரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்