விவசாயத்துறையில, ஓய்வுபெற்ற படை வீரர்களுக்கான நலன்புரி திட்டங்கள்
[2018/05/04]
22 வருடங்கள் தமது சேவையினை நிறைவு செய்யும் எந்த முப்படை
வீரர்களும் தமது சேவையிலிருந்து ஒய்வுபெறமுடியிம். இவ்வாறு ஓய்வுபெறும்
வீரர்களில் பெரும்பாலோர் 42-45 வயதுடையவர்களாகவே உள்ளனர். இவர்கள் தங்கள்
தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாப்பதில்
அர்ப்பணிப்புடன் செயலாற்றியதுடன், விசுவாசத்துடன் பணியாற்றிய சமுதாயத்தில்
உள்ள திறமைமிக்க ஆண்களாகவும், பெண்களாகவும் திகழ்கின்றனர். மேலும்,
இராணுவத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒழுக்கமான வாழ்க்கை முறைமையானது,
அவர்களுக்கு ஒரு சிறந்த உடல்ஆரோக்கியம், உளவியல் நிலை மற்றும் ஆக்கபூர்வமான
மனநிலையையும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு ஓய்வுபெற்றுச்செல்லும் ஒவ்வொரு பாதுகாப்பு
படையினரும் பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், போக்குவரத்து, விவசாயம்,
கட்டுமானம், தகவல் தொடர்பு, இயந்திரமுறை, உணவு தயாரித்தல் மற்றும் உணவு
பரிமாற்றம் போன்ற பல்வேறு துறைகளில் விலைமதிப்பற்ற அனுபவங்களுடன் தமது
சேவையை விட்டுச் செல்கின்றனர்.

இலங்கையைப் போன்ற வளர்முக நாடுகளில் மனிதவளமானது மிகவும்
பெறுமதிமிக்க ஒரு சொத்தாக காணப்படுகிறது. இதேவேளை ஓய்வுபெற்றுச்செல்லும்
முப் படைவீரர்கள் தமது முறையான கல்வியினை பாடசாலையில் குறைந்தது (க.பொ.த)
சாதாரண தரம் வரை பூர்த்தி செய்தவர்களாகவே காணப்படுவர். இவர்கள் முப்படையில்
இணைத்துக் கொள்ளப்பட்டதிளிருந்து அவர்களுக்கு தொழில்ரீதியான பயிற்சிகள்
மற்றும் அவர்கள் இணைத்து கொள்ளப்பட்ட பிரிவுகளுக்கமைய தொடர்ச்சியான
பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. மேலும், இவர்களில் அதிகமானோருக்கு வெளி
நாடுகளில் தொடர்ந்தும் பயிற்சிகளை மேற்கொள்ளவும் சந்தர்ப்பங்கள்
கிடைக்கப்பெறுகின்றன.

இவ்வாறான தேசிய வளங்கள் நாட்டின் உற்பத்தியினை
அதிகரிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதுடன், தேசிய அபிவிருத்தி இலக்குகளை
அடையும் வகையில் தரப்படுத்த வேண்டும்.
சேவையிலிருந்து ஓய்வு பெற்ற முப்படை வீரர்கள்,
காவல்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்புத் துறையினர் ஆகியோரின் சேவைகளை
பெற்றுக்கொள்வதுடன், அவர்களது தொழில் சார் தகைமைகள் மற்றும்
நிபுணத்துவத்துவங்களை பேணுதல் ஆகியன இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பிரதான
நோக்கமாகும். இவ் வீரர்களுக்கான குறித்த நலன்புரி திட்டமானது, ஜனாதிபதி
செயலகத்தின் வழிகாட்டல் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன்
விஜேவர்தன அவர்களின் ஆலோசனையின் பிரகாரமும் முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த இத்திட்டம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால்
முன்னெடுக்கப்படுவதுடன், தேசிய உணவு உற்பத்தி கொள்கைக்கு அமைய விவசாய
துறையில் இவர்கள் உள்ளவாங்ககப்படுகின்றனர். இச்சேவையின் ஊடாக இவர்களின்
ஓய்வூதிய நன்மைகளுடன் மேலதிக வருமானத்தை பெற்றுக்கொடுப்பதும், அவர்களது
நிபுணத்துவத்தை தக்கவைத்து தேசிய மனிதவள தேவைகளை நிவர்த்தி செய்துகொள்வதும்
இதன் இரண்டு பிரதான நோக்கங்களாக காணப்படுகின்றன.
ஓய்வுபெற்ற போர் வீரர்களின் பொருளாதார நிலைமைகளை தரங்களை
உயர்த்துவதுடன், விவசாயம் சார்ந்த சுய தொழில் முயற்சிகளால் அவர்களது
குடும்பத்தினரை மேம்படுத்துவதோடு, அதன் மூலம் நாட்டின் விவசாய பொருளாதார
வளர்ச்சிக்கான பங்களிப்புகளையும் பெற்றுக்கொள்ளுதல் இத் திட்டத்தின்
நோக்கமாகும்.

இத்திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட நபர்கள்
குழுவினருக்கு, நவீன விவசாய முறை, நவீன உபகரணங்களின் பாவனை முறை,
நீர்ப்பாசன முகாமைதத்துவ நுட்பங்கள், பூச்சிநாசினிகள் கட்டுப்படுத்தும் முறை,
வீட்டு தோட்டம் செய்யும் முறை, சேமிப்பு முறை, இரசாயன மற்றும்
பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துதல் போன்ற பல விடயங்களில் சிறப்பு பயிற்சிகள்
வழங்கப்படும்.
இவ்வருடம் (2018) உணவு உற்பத்தி ஆண்டாக
அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இவ் வீரர்களுக்கான வலுவூட்டும் இத்திட்டமானது,
ஆண்கள் மற்றும் பெண்கள் தேசிய துறையில் ஒத்துழைப்புக்களையும், தமது
பங்களிப்புக்களையும் வழங்குவதற்கு உதவியாக அமைந்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஓய்வூதிய நலன்கள் பெறும்
ஓய்வுபெற்ற வீரர்கள் மற்றும் போர் வீரர்களின் ஓய்வூதிய நலன்களை பெறும்
அவர்களின் மனைவிமார்கள் ஆகியோர் பயனாளிகளாக இணைந்துகொள்வதற்கு
தகுதியுடையவர்களாவர். மேலும், அவர்களுக்கு விவசாய நோக்கத்திற்கு
பயன்படுத்தக்கூடிய குறைந்தபட்சம் 20 பேர்செஸ் வீட்டு தோட்டம் அல்லது காணி
இருக்கவேண்டும்.
இத் திட்டத்திற்கு முதல் கட்டமாக 1000 பயனாளிகள் தேர்ந்
தெடுக்கப்படுவதுடன், எதிவரும் கட்டங்களின் இதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட
உள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியில் இத்திட்டம் மேலும் விரிவு
படுத்தப்படவுமுள்ளது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இத்
திட்டம், பிற நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து பயிற்சிகள், தேவையான உபகரணங்கள்
மற்றும் விதைகள் போன்றவற்றை வழங்குகின்றது. சனச வங்கி இத் திட்டத்தினை
ஆரம்பிப்பதற்கும் மற்றும் தொடர்வதற்கு தேவையான நிதிகளை வழங்கும். மேலும்,
சிறந்த விவசாய முன்னெடுப்புகளை மேற்கொள்பவர்களுக்கு அதிகபட்சமாக ஒரு
மில்லியன் ரூபாய் சிறப்பு சலுகை கடன் பெறுவதற்கான வசதிகள் செய்து
கொடுக்கப்படும்.
இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு
விவசாய திணைக்களம் அதன் அங்குனகொலபெலஸ்ஸ பயிற்சி நிலையத்தில் ஆரம்பகட்ட
பயிற்சியினை வழங்கும். அதன்பிறகு, கன்னொறுவ, அநுராதபுரம், மட்டக்களப்பு
ஆகிய விவசாய திணைக்களங்கள் மற்றும் குண்டசாலை பயிற்சி நிலையம் என்பவற்றின்
ஊடாக ஒவ்வொரு பயனாளியின் விவசாய தேவைகளுக்கேற்ப விஷேட பயிற்சிகளும்
வழங்கப்படும்.
மேலும், பயனாளிகளுக்கு தங்களின் ஒவ்வொரு கட்ட விவசாய
செய்கை நடவடிக்கைகளின் போதும் அப்பிரதேச செயலகப் பிரிவின் விவசாய
உத்தியோகத்தர்களால் தேவையான உதவிகளை வழங்க முடியும்.
இத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் 100 பயனாளிகள் இவ்வருடம்
(2018) பெப்ரவரி 21 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை அங்குனகொலபெலஸ்ஸ
பயிற்சி நிலையத்தில் வெற்றிகரமாக தமது பயிற்சியினை நிறைவுசெதுள்ளனர். இதனை
தொடர்ந்து மற்றுமொரு நிகழ்ச்சித்திட்டம் மாத்தளையிலும் இடம்பெற உள்ளது.
இந்த பல்நோக்கு திட்டம் ஓய்வுபெற்ற படை வீரர்களிடமிருந்து
ஒரு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தை
உணர்ந்து, தனிப்பட்ட நன்மைகள் மற்றும் தேசிய இலக்குகளை அடைந்துகொள்ளும்
வகையில் ஆர்வத்துடன் தமது வாழ்வில் மற்றொரு 'பணியினை' தொடங்க ஒப்பந்தம்
செய்துள்ளனர். ஒவ்வொரு பயனாளியும் ஒரு தொழிலதிபராகவும், நாட்டின் விவசாய -
பொருளாதார வளர்ச்சியின் செயல்திறன்மிக்க பங்களிப்பாளராகவும் செயல்படுவதை
நோக்கமாகக் கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தில் இணைந்துகொள்ள விரும்புபவர்கள் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சினை தொடர்புகொண்டு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு,
15/5,
பாலதக்ஸ மாவத்த,
கொழும்பு 03
011 2451750
Website - www.smod.lk |