››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தேசிய சுற்றுப்புறச் சூழல் வாரத்தினை அனுஷ்டிப்பில் இராணுவம் இணைவு

தேசிய சுற்றுப்புறச் சூழல் வாரத்தினை அனுஷ்டிப்பில் இராணுவம் இணைவு

[2018/06/06]

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இலங்கை இராணுவத்தினரால் மரநடுகை செய்யும் நிகழ்வு கிளிநொச்சியில் கடந்த ஞாயிறன்று (ஜுன், 03) இடம்பெற்றது. இந்நிகழ்வு கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் போது பலா, பாலை, வீரை, தோடை, பாக்கு, ஈரப்பலா ஆகிய பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை படைவீரர்கள் வீதியோரங்களில் நடுகை செய்தனர்.

படையினர் சூழலுக்கு பசுமை சேர்க்கும் வகையில் மேலும் மரங்களை நடுவதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளூர் மக்களுக்கு மரக்கன்றுகள் விநியோகித்தனர். இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ஞாயிறன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இந்தத் திட்டத்தினை அண்டைய கிராமங்களுக்கு விரிவுபடுத்தவும் மேலும் அவற்றுக்குத் தேவையான மரக்கன்றுகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

இம் மரநடுகை திட்டம் இராணுவத்தினரால் சிரமதான முறையில் முன்னெடுக்கப்படுகின்றது. இத்திட்டத்தில் கிளிநொச்சி பாதுகாப்பு படையைச் சேர்ந்த சுமார் 350ற்கும் மேற்பட்ட இராணுவ சிப்பாய்களும் உள்ளூர்வாசிகளும் கலந்துகொண்டனர். தேசிய சுற்றுப்புறச் சூழல் வாரத்தினை அனுஷ்டிக்கும் வகையில் A-9 பிராதான வீதியின் 23ம் மற்றும் 254ம் மைல் கல் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் இவ்வாறான மர நடுகை செயற்றிட்டங்கள் நாட்டில் பசுமை திட்டத்தினை ஏற்படுத்தும் வகையில் நாட்டின் பல்வேறு பகுதிகளையும் உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்படுகின்றது. இதேவேளை கடந்த வருடம் இதுபோன்ற மரநடுகை திட்டத்தின் கீழ் சுமார் 135,000 மரங்கள் கிளிநொச்சி பிராந்தியத்தில் நடுகை செய்யப்பட்டன.மேலும் தென்னை மரச்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் இப்பிரதேசத்தில் சுமார் 2500 தென்னங்கள் கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்