››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வறட்சியால் பாதிக்கப்பட்ட பொத்துவில் மக்களுக்கு குடிநீர் விநியோகம்

வறட்சியால் பாதிக்கப்பட்ட பொத்துவில் மக்களுக்கு குடிநீர் விநியோகம்

[2018/06/14]

தென்மேற்கு பருவமழை காரணமாக வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முப்படையினரும் நிவாரண உதவிகளை வழங்குவதில் முனைப்புடன் ஈடுபட்டுள்ள அதேவேளை, கிழக்கு பிராந்திய மக்களுக்கு முக்கிய தேவையான குடிநீர் வழங்கும் மற்றொரு நிவாரண பணிகளில் இலங்கை இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் படைப்பிரிவினர், கடந்த (மே) மாதம் முதல் கோமாரி, செல்வபுரம் மற்றும் பொத்துவில் ஆகிய பிரதேசத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட சுமார் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். வறட்சி காலநிலை தொடர்ந்தும் இப்பகுதியில் நீடித்து, மக்கள் குடிநீர் பெறுவதில் மிகவும் சிரமங்களை அனுவவிப்பதால், இராணுவத்தினர் இந்நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

அரச அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர்தாங்கிகள் நீர் நிறைக்கப்பட்டு மக்களின் குடி நீர் தேவைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, தொடர்ந்தும் இராணுவ பவ்சர் வாகணங்கள் மூலம் நீர் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்