››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தனியாருக்கு சொந்தமான சுமார் 120 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இராவத்தினரால் விடுவிப்பு

தனியாருக்கு சொந்தமான சுமார் 120 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இராவத்தினரால் விடுவிப்பு

[2018/06/19]

தெல்லிப்பளை, கராச்சி, மரிதிமேப்பற்று ஆகிய பிரதேசங்களில் இராணுவத்தினரின் உபயோகத்தில் இருந்துவந்த சுமார் 120 ஏக்கருக்கு மேற்பட்ட காணிக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் குறித்த மாவட்ட செயலாளர்களிடம் கையளித்துள்ளார். இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நல்லிணக்கத்தின் ஒரு பகுதியாக குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனெரல் நிஷங்க ரணவன அவர்கள் இராணுவ தளபதி சார்பாக, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் உள்ள குறித்த காணிகளின் உத்தியோகபூர்வ ஆவணங்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் சமர்பித்தார். பின்னர் ஜனாதிபதி அவர்கள் அவ் ஆவணங்களை குறித்த மாவட்ட செயலாளர்களிடம் கையளித்துள்ளார்.

அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் 62.95 ஏக்கர்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 05.94 ஏக்கர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 52 ஏக்கர்களும் விடுவிக்கப்பட்டு காணி உரிமையாளர்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை உட்பட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பு ஏற்படாதவாறு இராணுவ முகாம்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் செயற்திட்டத்தின் கீழ் சுமார் 55,510.58 ஏக்கர் தனியார் மற்றும் அரச காணிகளை 2017 டிசம்பரில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளன.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்