››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

குளியாப்பிடிய பிரதேசத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவத்தினர் விரைவு

குளியாப்பிடிய பிரதேசத்தில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இராணுவத்தினர் விரைவு

[2018/06/20]

அண்மையில் (ஜூன், 19) சூறாவளியினால் சேதத்துக்குள்ளாக்கப்பட்ட குளியாப்பிடிய பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இராணுவத்தின் ஒரு குழுவினர் விரைந்து சென்றுள்ளனர். குளியாப்பிடிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மீகஹகொடுவ, பகல பிதும மற்றும் பஹத எம்பாவ ஆகிய பகுதிகளுக்கு அவசர சேவைகளை வழங்கும் வகையில் மேற்கு படைத் தலைமையகத்தை சேர்ந்த 14வது பிரிவின் 143 பிரிகேட் மற்றும் 53வது பிரிவின் 532 பிரிகேட் ஆகிய படைப்பிரிவுகளை சேர்ந்த 40 இராணுவ வீரர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாலை இரண்டு மணியளவில் வீசிய சூறாவளியினால் இப்பிராந்தியம் முழுவதிலுமுள்ள பொது மற்றும் தனியார் சொத்துக்கள் பல சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன. அத்துடன் வீதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து வீழ்ந்து வீதிப்போக்குவரத்துகள் தடைப்பட்டு காணப்படுகிறன. மேலும் வீதித்தடைகளை அகற்றுவதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளையும் வழங்குவதில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்