››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை மனித உரிமைகள் ஆணையம் இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் ஐ.நா. அமைதிகாக்கும் பிரச்சினைகளை தீர்வு

இலங்கை மனித உரிமைகள் ஆணையம் இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் ஐ.நா. அமைதிகாக்கும் பிரச்சினைகளை தீர்வு

[2018/06/28]

 

இலங்கை மனித உரிமைகள் ஆணையம் இருதரப்பு ஒத்துழைப்பு மூலம் ஐ.நா. அமைதிகாக்கும் பிரச்சினைகளை தீர்வு

2004 ஆம் ஆண்டு இலங்கையில் இராணுவத்தினர் ஐ.நா அமைதி காக்கும் பணிகளுக்காக ஒத்துழைப்பு வழங்கியதுடன் இலங்கையில் இருந்து அமைதிகாக்கும் துறைகளுக்கு (UNDPKO) அதிக எண்ணிக்கையிலான படையினர்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

அதன்படி ஐ.நா அமைப்பின் செயலாளர்களினால் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 அம் திகதி இலக்கம் 2012/18 இன் முடிவின் படி ஐ.நாட்டு பணிகளுக்காக மனித உரிமை கண்காணிப்பு செயல்முறைகள் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினரால் குறித்த நபர்ரை விசாரணைக்கு மேற்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இலங்கை இராணுவத்தினரால் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளியுறவு அமைச்சகம் இணைந்து ஐ.நாவின் (UNDPKO) மக்கள் நடவடிக்கைக் குழு மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினருடன் பேச்சு வார்தை நடத்தினர்.

அதன்படி ஜெனீவாவில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்கான இராணுவ படைகளின் உறுப்பினர்களை அனுப்புவதற்கு தற்போது இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகிறது.

இலங்கை இராணுவத்தினரால் இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தீர்வு முறைகள் திருப்திகரமாக அமையப்பட்டது. குறிப்பாக இலங்கையின் ஐக்கிய நாடுகள் சபையின் தற்போது அமைதி காக்கும் பணிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சுயாதீன ஆய்வு ஆரம்பிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில், சம்பந்தப்பட்ட உடன்படிக்கைகளின்படி தற்போது அமைதி காக்கும் பணிகளுக்கு அனுப்பப்படும் படையினர்கள் தாமதத்தை பற்றி ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு அமைச்சு (UNDPKO) இலங்கை இராணுவம் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறது.

இந்த கலந்துரையாடுதலில் வெளியுறவு அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்> நியூNயார்க் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் நடவடிக்கை அதிகாரிகள், இராணுவ தளபதி, கடற்படை, விமானப் படைத் தளபதிகள், இராணுவ வெளிநாட்டு நடவடிக்கைகள் பொலிஸ் விசேட அதிரடிப் படையின் அதிகாரி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளின் தலைமையில் கடந்த (21) ஆம் திகதி வியாழக் கிழமை கொழும்பில் இந்த கலந்தறையாடல் நடைப்பெற்றது.

மேலும் இலங்கை இராணுவம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினரின் ஒத்துழைப்புடன் இலங்கை இராணுவத்தினரால் முன் வைக்கப்பட்ட குறைபாடுகள்> கஷ்டங்கள், முரண்பாடுகள், குடியிருப்பு முகவரிகள் மீள்குடியேற்றம் போன்ற பிரச்சினைகள் பற்றி கலந்துறையாடப்பட்டது.

இலங்கை இராணுவம் அதன் ஆணையை நிறைவேற்றுவதற்காக அனைத்துலக முறைக்கு சிறந்த ஒத்துழைப்பை உறுதி செய்யும் அதே வேளை இந்த இரு இருதரப்பு புரிந்துணர்வு மற்றும் ஒருங்கிணைப்பு இரு தரப்பினரும் அடிப்படையில் எழும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பொருத்தமான விடயங்களை சரிசெய்ய உதவுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட உடன்பட்டது.

இப்போது லெபனான், தெற்கு சூடான், மாலி, அபே, நியூயார்க், மத்திய ஆப்பிரிக்க குடியரசு மற்றும் மேற்கு சகாரா, நிலங்களையும் இராணுவ பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு அதிகாரிகள், உதவி அதிகாரிகள் ஒத்துழைப்பு அல்லது அமைதிகாக்கும் பணிக்காக விண்ணப்பிக்கும் இலங்கை இராணுவத்தினரின் அதிகளவிலான இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது ஐக்கிய நாடுகள் (UNDPKO) அமைதி காக்கும் நடவடிக்கைகளில் 450 க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவத்தினர் 07 ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிக்காக உள்ளனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்