››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பாதுகாப்புச் செயலாளருடன் சந்திப்பு

[2018/06/28]

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்களை இன்று (ஜுன்,28) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது, பாதுகாப்பு செயலாளர் மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன், இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று நாட்டினை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்