››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி இலங்கை வருகை

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி இலங்கை வருகை

[2018/06/27]

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று (ஜுன்,27) இலங்கையை வந்தடைந்தார். நாட்டிற்கு வருகை தந்த பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அவர்களை பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர சி விஜேகுனரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.

இதன்போது இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கலாநிதி. ஷஹீத் அஹ்மத் ஹஷ்மத் அவர்களும் வருகை தந்திருந்தார்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அவர்களின் நான்கு நாட்கள் கொண்ட இவ்விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதி, பாதுகாப்பு செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் சப்புகஸ்கந்த பாதுகாப்பு சேவைகள் கட்டளை மாற்றும் அதிகாரிகள் கல்லூரியில் முக்கிய உரையாற்றவுள்ளார்.

இராணுவ பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்த ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் 1978ஆம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவத்தில் இணைந்துகொண்டார். தற்போதைய பதவிநிலைக்கு அவர் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார். ஜெனரல் சுபைர் மஹ்மூத் ஹயாத் அவர்கள் இஸ்லாமிய குடியரசின் நான்கு நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு சிரேஷ்ட அதிகாரியாகும். அத்துடன் அவர் நிஷான் இ இந்தியாஸ் பதக்கத்தும் உரித்துடையவர் என்பது குறிப்படத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்