››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

முல்லைத்தீவில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு பல மில்லியன்கள் பெறுமதியான நன்கொடைகள்

முல்லைத்தீவில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு பல மில்லியன்கள் பெறுமதியான நன்கொடைகள்

[2018/06/29]

முல்லைத்தீவு பிராந்தியத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கான பல்வேறு சமூக நலன்புரித் திட்டங்கள் இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பல மில்லியன் ரூபா பெறுமதியான பால் பசுக்கள், சக்கர நாற்காலிகள், விவசாய உபகரணங்கள், மற்றும் பாடசாலை உபகரணங்கள் ஆகியவற்றை பயனாளிகளுக்கு விநியோகித்தது. குறித்த பொருட்களை பயனாளிகளுக்கு விநியோகிக்கும் நிகழ்வு பொசன் பௌர்ணமி தினத்தில் (27) இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வைபவத்தின் போது சுமார் 100 பால் பசுக்கள் 100 தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பகளுக்கிடையில் விநியோகிக்கப்பட்ட அதேவேளை 50 க்கும் மேற்பட்ட சக்கர நாற்காலிகளும் அப்பகுதியில் உள்ள அங்கவீனமுற்ற பொதுமக்கள் மற்றும் தொலைதூர மருத்துவமனைகள் என்பனவற்றிற்கு வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் 150 பாடசாலை உபகரணங்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் மற்றும் , ரூ .1000.00 பெறுமதியான 150 மண்வெட்டிகள் ஆகியவை முறையே தேர்ந்தெடுத்த மாணவர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

வணக்கத்துக்குரிய (கலாநிதி ) ஓமல்பே சோபித நாயக்க தேரர் அவர்களின் எம்பிலிப்பிட்டிய ஸ்ரீ போதி ராஜா அறக்கட்டளை அனுசரணையுடன் ரூ. 5.5 மில்லியன் நன்கொடை, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது.

மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான அடையாளம் காணப்பட்டுள்ள இப்பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக முல்லைத்தீவில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களினால் பெருமளவிலான சமூக உதவித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இலவச மருத்துவ சிகிச்சை முகாம்கள் , மருந்து மற்றும் ஊட்டச்சத்துக்கள், பாடசாலை உபகரணங்கள், சீருடைகள், கல்வி உதவித்தொகை, மிதிவண்டிகள், மூக்குக் கண்ணாடி, காய்கறி மற்றும் பழ விதைகள் மற்றும் மரக்கன்றுகள், கூரைத்தகடுகள், வீட்டுப்பாவனைக்கான சமையலறை ப் பாத்திரங்கள் உள்ளிட்ட பல உதவிப்பொருட்கள் வழங்கபடுகின்றன. இப்பகுதியில் இனங்காணப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், இந்த குடிமக்களின் குடிநீர் மற்றும் நீர்ப்பாசன வசதிகளுக்காக கிணறுகள் தோண்டுதல் போன்ற திட்டங்களுக்காக நடவடிக்கை எடுக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்