››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்ற ‘புளத்திஷி பொசன் உதானய’ நிகழ்வு

இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் இடம்பெற்ற ‘புளத்திஷி பொசன் உதானய’ நிகழ்வு

[2018/06/29]

மேன்மை தங்கிய சனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களது பங்கிளிப்புடன் ‘ பிபிதெமு பொலன்னறுவை’ எழுச்சி திட்டத்தின் கீழ் சனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் பொலன்னறுவையில் பொசன் நிகழ்வுகள் (27) ஆம் திகதி இடம்பெற்றன.

முப்படையினரால் புணரமைக்கப்பட்ட பொலன்னறுவையில் உள்ள உனகல விகாரையும் மேன்மை தங்கிய சனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டன. இந்த கட்டிட பணிகள் 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டன.

முப்படையினால் புணரமைக்கப்பட்ட திம்புலாகல ஆரன்ய சேனாசனய, மஹாசங்க, வஹலகட, பிரிவென போன்ற பௌத்த மடங்கள் மற்றும் தொலஸ்மாஹே விளக்கு, தியான நிலையங்களும் அன்றைய தினங்களில் சனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டன.

பொலன்னறுவையில் உள்ள கல் விஹாரையில் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட பௌத்த சமய நிகழ்வுகளிலும் இராணுவ தளபதியின் அழைப்பையேற்று சனாதிபதி அவர்கள் பங்கேற்றுக் கொண்டார்.

பொலன்னறுவை கதுருவெல பிரதேசத்தில் இடம்பெற்ற ‘புளத்திஷி பொசன் உதானய’ பொசன் வலய நிகழ்வுகளிலும் சனாதிபதி, அமைச்சர்கள், இராணுவ தளபதி, கடற்படை தளபதி மற்றும் விமானப்படை தளபதி போன்றோர் பங்கேற்றுக் கொண்டனர்.

மேலும் இராணுவத்தினரால் பராக்கிரம சமுத்திர பிரதேசத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட அன்னதான நிகழ்வுகளில் இராணுவ தளபதியின் அழைப்பையேற்று சனாதிபதி அவர்கள் வருகை தந்து அப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களுக்கு அன்னதானங்களை பரிமாரினார். இப்பிரதேசத்தில் இராணுவத்தினரால் பொசன் கூடுகள், மேடை நாடகங்கள் நடாத்தப்பட்டன.

இந்த நிகழ்விற்கு அமைச்சர்கள், ஆளுனர், இராணுவ தளபதி, கடற்படை தளபதி, விமானப்படை தளபதி, கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல,’ பிபிதெமு பொலன்னறுவை’ கருத்திட்டத்தின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க அவர்களும் கலந்து கொண்டனர்.

     
     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்