››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான கடற்படை வீரர்களுக்கான தேடித் கைப்பற்றல் பாடநெறி வெற்றிகரமாக நிறைவு

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான கடற்படை வீரர்களுக்கான தேடித் கைப்பற்றல் பாடநெறி வெற்றிகரமாக நிறைவு

[2018/07/02]

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகத்துடன் (UNODC) இணைக்கப்பட்ட பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு கடற்படை வீரர்களுக்கான தேடித் கைப்பற்றல் (VBSS) தொடர்பான பாடநெறி அண்மையில் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இப்பாடநெறி, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான அலுவலகம் ஆகியோரின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் திருகோணமலை, சிறப்பு படகு ஸ்குட்ரான் பயிற்சிப்பாடசாலையில் இடம்பெற்றதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது தேடித் கைப்பற்றல் (VBSS) தொடர்பான பாடநெறியின் நிறைவு விழா, ஜூன் மாதம் 29ம் திகதியன்று சிறப்பு படகு ஸ்குட்ரான் தலைமையகத்தில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் கடற்படை அதிகாரிகளின் பிரதானி ரியர் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இரண்டு வாரகால இடைவெளியினைக்கொண்ட இப் பாடநெறி 18 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நடைபெற்றது. இப்பயிற்சி நெறியில் பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து 08 கடற்படை வீரர்களும் மற்றும் இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல் படையிலிருந்து இருந்து 12 வீரர்களும் கலந்து கொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்