››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கல்வியில் சாதனை புரிந்த இளம் யாழ் மாணவர்கள் இராணுவத்தினரால் பாராட்டு

கல்வியில் சாதனை புரிந்த இளம் யாழ் மாணவர்கள் இராணுவத்தினரால் பாராட்டு

[2018/07/04]

அண்மையில் யாழ் மாவட்டத்தில் கல்வியில் சாதனை புரிந்த மூன்று இளம் மாணவர்கள் இலங்கை இராணுவத்தினரால் பாராட்டப்பட்டுள்ளனர். யாழ் பாதுகாப்பு படை தலைமையகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற (க.பொ.த) உயர்தர பரிட்சையில் அகில இலங்கை ரீதியாக உயர்நிலைகளை பெற்று சித்தியடைந்த மூன்று யாழ் மாணவர்கள் பெருமதியான பரிசில்கள் மற்றும் கல்வி ஊக்குவிப்பு கொடுப்பனவுகள் என்பன வழங்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ் ஹாட்லி கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஶ்ரீதரன் துவாகரன், பௌதீக விஞ்ஞானத்துறையில் அகில இலங்கை ரீதியாக முதலாவது இடத்தையும், புனித பெட்ரிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஆர்.டி.ஜே போல் ஜன்சன் மற்றும் யாழ் வேம்படி மகளீர் கல்லூரியைச் சேர்ந்த கமலேஸ்வரி செந்தில்நாதன் என்ற மாணவி ஆகியோர் அகில இலங்கை ரீதியாக பௌதீக விஞ்ஞானம் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பெற்றுகொண்ட மாணவர்களுக்கு, 306 பீ2 மாகொல லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் மூன்று மடிக் கணனிகள் மற்றும் மாதாந்த புலமைப்பரிசில் கொடுப்பனவாக 5000/= ரூபாய் பணமும் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில், யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி, லயன்ஸ் கழகத்தின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட மாணவர்களும் கலந்துகொண்டனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்