››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் சிரமதான நிகழ்வுகள்

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் சிரமதான நிகழ்வுகள்

[2018/07/04]

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக இராணுவ வீரர்கள் உள்ளூர் விவசாய சமூகத்துடன் இணைந்து சிரமதான பணியினை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளனர். சனிக்கிழமை (ஜூன், 30)வார இறுதிநாட்களில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சிரமதான பணியியில் இப்பகுதியிலுள்ள பெரும் எண்ணிக்கையிலான பல வயல் நிலங்களுக்கு நீர் வழங்கக்கூடிய கணேசபுரம் விவசாயக் கால்வாய் சுத்திகரிக்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்திலிருந்து கணேசபுரம் விவசாயக் கால்வாயுனூடாக வயல்களுக்கு நீர் வழங்கப்படுவதுடன், இப்பகுதியின் விவசாயம் சார்ந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கான பிரதான மூலாதாரமாக இது காணப்படுகிறது. இராணுவத்தினரின் சமூக சேவை நிகழ்வுகளில் ஒன்றாக இச்சிரமதான பணிகள் மூலம் அவர்களின் ஒத்துழைப்புக்களை நல்கியுள்ளனர்.

இதேவேளை, மேலும் பல பிரதேசங்களில் இவ்வாறு பல்வேறு சிரமதான பணிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்