››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

வடக்கு இராணுவத்தினரால் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு

வடக்கு இராணுவத்தினரால் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு

[2018/07/10]

யாழ்ப்பாணத்திலுள்ள 52 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 523 ஆவது படைத் தலைமையகத்தின் ஒன்பதாவது வருட பூர்த்தியினை முன்னிட்டு படையினரால் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு படைத்தலைமைகத்தில் இடம்பெற்றது.

இவ்வைபவத்தில் படைத்தலைமைகத்தின் கீழ் உள்ள சுமார் 90ற்கு மேற்பட்ட இராணுவ வீரர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றது. இவ்விரத்தான நிகழ்விற்கு யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரிகள், மருத்துவ தாதிகள் மற்றும் இதர வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளியிட்ட பலர் பங்களிப்பினை வழங்கினார்.

இதற்கிடையில் இந்து, கத்தோலிக்க, இஸ்லாமியம் மற்றும் பௌத்த மத தலைவர்கள் இணைந்து மத விழுமியங்கள் மூலம் எவ்வாறு மத நல்லிணக்கம், சகவாழ்வு, பரஸ்பர புரிந்துணர்வு, என்பவைகள் ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். ஆலங்குளம், துணுக்காய் பிரதேசத்தில் உள்ள 65ஆம் பிரிவு தலைமையகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் 30 க்கும் மேற்பட்ட சமய தலைவர்கள் கலந்துகொண்டனர்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்