››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் சிரமதானப்பணிகள் ஏற்பாடு

கிளிநொச்சி பாதுகாப்பு படையினரால் சிரமதானப்பணிகள் ஏற்பாடு

[2018/07/11]

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக வீரர்களினால், படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான புரிந்துணர்வினை அதிகரிக்கும் வகையில் சிரமதான தொடர் நிகழ்வு ஒன்று கடந்த வாரம் முத்துஎடுக்கப்பட்டது. கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைத் பிரிவின் 150ற்கு மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் இத்தொடர் நிகழ்வில் பங்கெடுத்ததாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


இத்தொடர் நிகழ்வின்போது கணேசபுரம் பிள்ளையார் கோயில் வளாகம், கொடேகட்டியார்குளத்திலிருந்து அம்பலபெருமாள்குளம் வரைக்கான வீதியோரங்க ஒட்டாருத்தகுளம் ரதம் பாலர் பாடசாலை வளாகம் ஆகிய பல்வேறு பகுதிகள் பாதுகாப்பு படை வீரர்களினால் சுத்தம் செய்யப்பட்டன.


இத்தகைய பல சமூக நல திட்டங்கள், உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக பிராந்தியத்தில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டுவருகின்றன. பாதுகாப்புப் வீரர்களினால் முன்னெடுக்கப்பட்டு இந்த முயற்சிகள் பல சந்தர்ப்பங்களில் மிகவும் பாராட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்