››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இரண்டு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

இரண்டு இந்திய மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

[2018/07/17]

வடக்கு கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று (ஜூலை, 16) மீட்டுள்ளனர்.

ரெஜிபோம் தளத்தின் மீது தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு இந்திய மீனவர்களை அவதானித்த கச்சதீவு பிரிவிலுள்ள இலங்கை கடற்படை வீரர்கள் விரைந்து செயற்பட்டு தமது அதிவேக தாக்குதல் படகின் மூலம் இம்மீனவர்களை காப்பற்றி உள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிவேக தாக்குதல் படகின் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்ட இவர்கள் இலங்கை கடற்படை கப்பல் உத்தர விற்கு கொண்டுவரப்பட்டு, மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்