››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்ககளுக்கான உதவிகளை ரணவிரு சேவா அதிகாரசபையினால் வழங்கிவைப்பு

அங்கவீனமுற்ற இராணுவ வீரர்ககளுக்கான உதவிகளை ரணவிரு சேவா அதிகாரசபையினால் வழங்கிவைப்பு

[2018/07/18]

ஓய்வுபெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்ககள் ஒரு குழுவினருக்கு செயற்கை கால்கள் மற்றும் மருத்துவ உதவிகள் என்பன வழங்கிவைக்கும் நிகழ்வு ரணவிரு சேவா அதிகாரசபையில் இன்று (ஜூலை, 18) இடம்பெற்றுள்ளது. ரணவிரு சேவா அதிகாரசபையின் சுகாதாரப்பிரிவு ஏற்பாடுசெய்திருந்த இந்நிகழ்வின் மூலம் அவர்களின் தேவைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இதன்போது, இராணுவ, விமானப்படை, மற்றும் காவல்துறை ஆகிய அங்கவீனமுற்ற எட்டு யுத்த வீரர்களுக்கு செயற்கை கால்கள் மற்றும் சிறுநீர் வெளியேற்றும் பைகள் என்பன வழங்கிவைக்கப்பட்டன. திருமதி. கமனி கருணாரத்ன அவர்களின் உயில் மூலம் பெறப்பட்ட நிதியின் ஊடாக நான்கு செயற்கை கால்கள் ரணவிரு சேவா அதிகாரசபைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. இதேவேளை, ரணவிரு சேவா அதிகாரசபையின் ஒதுக்கீட்டில் பெறப்பட்ட சிறுநீர் வெளியேற்றும் பைகள் ஏனைய நால்வருக்கு வழங்கிவைக்கப்பட்டன.

ந்நிகழ்வில் ரணவிரு சேவா அதிகாரசபையின் பிரதித்தலைவர் திருமதி உபுலங்கணி மாலகமுவ, ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) NAPC நாபாகொட மற்றும் ஏனைய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

ரணவிரு சேவா அதிகாரசபை யுத்த வீரர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலன்புரி திட்டங்களை ஆரம்பித்துள்ளது. செயற்கை கால்கள் மற்றும் மருத்துவ உதவிகள் என்பவற்றை வழங்கிவைப்பது அவற்றில் ஒன்றாக காணப்படுகிறது. “விருசர” வரப்பிரசாத அட்டை வழங்கும் திட்டம் இதன் பிரதானமாக காணப்படும் அதேவேளை இச்செயற்றிட்டத்தின் மூலம் 60க்கு மேற்பட்ட அரச மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு நன்மைகள் கிடைக்கப்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரணவிரு சேவா அதிகாரசபைஇன் 'விரு சுமித்ரு' வீடமைப்புத் திட்டத்தின் மூலம் நான்கு வருடங்களுக்குள் யுத்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு சுமார் 3600 க்கும் மேற்பட்ட புதிய வீடுகள் மற்றும் பகுதியளவில் கட்டப்பட்ட வீடுகளை முழுமைப்படுத்தி கொடுப்பதே இதன் நோக்கமாகும். மேலும் ரணவிரு சேவா அதிகாரசபை ஊடாக கடன் வசதிகள், யுத்த வீரர்களது பிள்ளைகளுக்கு தேவையான கல்வி ஊக்குவிப்பு வசதிகள் என்பன வழங்கப்படுகிறது. இவ் அதிகாரசபை பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்