››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிழக்குப் பிராந்திய (க.பொ.த) உயர்தர மாணவர்களுக்கு கல்விக்கருத்தரங்கு

கிழக்குப் பிராந்திய (க.பொ.த) உயர்தர மாணவர்களுக்கு கல்விக்கருத்தரங்கு

[2018/07/20]

கிழக்குப் பிராந்தியத்தில் இம்மாதம் (ஜூலை) 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் இரண்டு நாள் கல்விக் கருத்தரங்கினை இலங்கை இராணுவத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் (க.பொ.த) உயர்தர பரீட்சையில் தோற்ற உள்ள மாணவர்களுக்கு இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூதூர் அல்ஹிதாயா மகாவித்தியாலத்தில் வலயக்கல்வி அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் வர்த்தகம் மற்றும் கலைப்பிரிவுகளில் கல்வி பயிலும் 6 பாடசாலைகளை சேர்ந்த 185 க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து பயன் பெற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சிற்றுண்டிகள் போக்குவரத்து வசதிகள் என்பன இராணுவத்தினரால் வழங்கிவைக்கப்பட்டன. இவ்வாறன கருத்தரங்குகள் மாணவர்களின் கல்வித்தரத்தினை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்