››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவ மூலோபாய மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

இலங்கை ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவ மூலோபாய மாநாட்டில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

[2018/07/27]

இலங்கை ஒருங்கிணைந்த எல்லை முகாமைத்துவ மூலோபாய மாநாடு கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (ஜூலை, 26) இடம்பெற்றது. இம்மாநாட்டில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்விற்கு வருகைதந்த செயலாளர் அவர்கள் குடியகல்வு மற்றும் குடிவரவு திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.என். ரணசிங்க அவர்களால் வரவேற்கப்பட்டார். இதன்போது, தேசிய எல்லை முகாமைத்துவக் குழுவின் தலைவரான செயலாளர் அவர்களால் முக்கிய உரையும் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில், கடற்படை தளபதி, தேசிய எல்லை முகாமைத்துவக் குழுவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள் மற்றும் முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு குறிப்பாணைக்கு அமைவாக தேசிய பாதுகாப்பு முகாமைத்துவக் குழுவானது நவம்பர் 2016 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், 2018 ஆம் ஆண்டில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்காக அமைச்சரவையினால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்