››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு

சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு

[2018/07/30]

அண்மையில் இடம்பெற்ற நிகழ்வின்போது, சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. இதன்பிரகாரம், தகுதிகாண் காலத்தை நிறைவு செய்த சுமார் 39000 சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டதாக சிவில் பாதுகாப்புத் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வின்போது, தலைமையகம் மற்றும் கண்டி படை தலைமையகம் ஆகியவற்றில் இணைப்புப்பெற்றுள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஊழியர்கள் ஒரு குழுவினருக்கு, சிவில் பாதுகாப்பு திணைக்களத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரால் நிர்மால் கொஸ்வத்த அவர்களால் அடையாளப்பூர்வமாக நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

பயங்கரவாத அச்சுறுத்தலின் கீழ் உள்ள எல்லைகள் மற்றும் கிராமங்களைப் பாதுகாப்பதற்காக 1980ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் தொண்டர் சேவையின் அடிப்படையில் தேசிய ஊர்காவல் படை சேவையானது நிறுவப்பட்டது. இவர்களுக்கு கொடுப்பனவுகள் எதுவும் வழங்கப்படாதநிலையில் கூட்டுறவு விற்பனை நிலையத்தின் ஊடாக உலர் உணவுப்பொருட்கள் மாத்திரம் வழங்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, அவர்கள் பொலிஸ் திணைக்களத்தின் கீழ் சேவையில் அமர்த்தப்பட்டு நாட் சம்பளம் வழங்கப்பட்டதுடன், ஹொரண கும்புக்க முகாமில் அவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டது. இதன் பின்னர், 2006 செப்டம்பர் 13ஆம் திகதிய 1462/ 20ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஊர்காவல் சேவை மீளமைக்கப்பட்டு சிவில் பாதுகாப்பு திணைக்களம் நிறுவப்பட்டது.

சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களின் எண்ணிக்கை 41,500ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மாத இராணுவ பயிற்சியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு இருவகையான சீருடைகள் வழங்கப்படுவதுடன், நியாயமான சம்பளமும் வழங்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமைக்கு தேவையான உதவிகளை இராணுவத்தினர் மற்றும் காவல்துறையினருக்கு வழங்குவது சிவில் பாதுகாப்புத் திணைக்கள ஊழியர்களின் பிரதான செயற்பாடுகளில் ஒன்றாக காணப்படுகின்றது. அத்துடன், வெள்ளம் மற்றும் மண் சரிவு போன்ற அனர்த்த நிலைமைகளின்போது தமது உதவிகளை வழங்கியதுடன், ஏனைய சமூகநல செயட்பாடுகளின்போதும் அவர்கள் தமது உதவிகளை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்