››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

டன்லொப் பெல் பாய்மரக் கப்பல் போட்டியில் இலங்கை கடற்படை படகோட்ட வீரர்கள் பிரகாசிப்பு

டன்லொப் பெல் பாய்மரக் கப்பல் போட்டியில் இலங்கை கடற்படை படகோட்ட வீரர்கள் பிரகாசிப்பு

[2018/07/28]

அண்மையில் பொல்கொடை ஏரியில் நடைபெற்ற பாய்மரக் கப்பல் படகோட்டப் போட்டியில் இலங்கை கடற்படை படகோட்ட வீரர்கள் பல்வேறு நிகழ்வுகளில் வெற்றி பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிகழ்வு இலங்கை பாய்மரக்கப்பல் சம்மேளனத்தின் டன்லொப் பெல் பாய்மரக் கப்பல் படகோட்டிகள் சங்கத்தினால் பொல்கொடை ஏரியில் இம்மாதம் (ஜூலை) 22ஆம் திகதி நாடாத்தப்பட்டுள்ளது.

இதன்போது, 52 படகோட்ட வீரர்கள் போட்டியிட்டு பல்வேறு நிகழ்வுகளில் வெற்றிபெற்றுள்ளனர். கடற்படை படகோட்டிகள் சங்கம், கொழும்பு மோடோ பாய்மரக் கப்பல் சங்கம், ரோயல் கொழும்பு பாய்மரக் கப்பல் சங்கம் ஆகிய நாற்பது பாய்மரக் கப்பல் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தியும் மற்றும் பாடசாலை சங்கங்களாக கல்கிஸ்ஸை புனித தோமஸ் கல்லூரி, மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரி ஆகிய பாடசாலை பாய்மரக்கப்பல் சங்கங்களும் இப்போட்டிகளில் கலந்துகொண்டன.

இங்கு இடம்பெற்ற லேசர் ஸ்டாண்டட், லேசர் ரேடியல், எண்டர்பிரைஸ், ஜிபி 14 மற்றும் திறந்த போட்டி நிகழ்வுகளிலும் இலங்கை கடற்படை படகோட்ட வீரர்கள் முதலாம் இடத்தை சுவீகரித்துள்ளதுடன், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களிலும் பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்