››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சதுப்புநில சூழலலைப் பாதுகாக்கும் சர்வதேச தினத்தினை முன்னிட்டு கடற்படையினர் கண்டல் தாவக்கண்றுகளை நடுகின்றனர்

சதுப்புநில சூழலலைப் பாதுகாக்கும் சர்வதேச தினத்தினை முன்னிட்டு கடற்படையினர் கண்டல் தாவக்கண்றுகளை நடுகின்றனர்

[2018/07/28]

வடக்கு மற்றும் வடமேல் மாகான கடற்படை கட்டளையகத்தின் கீழுள்ள இலங்கை கடற்படையினர் அண்மையில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்க்களை முன்னெடுத்துள்ளனர். இதற்கமைய கடல்நீரேரி பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட இடங்களில் சுமார் 1000 கும் அதிகமான சதுப்புநில கண்டல் தாவக்கண்றுகளை நாட்டியுள்ளனர். இந்நிகழ்வு, சதுப்புநில சூழலலைப் பாதுகாக்கும் சர்வதேச தினத்தினை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் (ஜூலை) 26ஆம் திகதி கரையோர பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட இம்மரநடுகை நிகழ்ச்சித்திட்டம் வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை பிராந்தியங்களில் கடற்படை அதிகாரிகள், கடற்படை வீரர்கள், மாணவர்கள் மற்றும் ஊர்வாசிகள் அனைவரினதும் பங்களிப்புடன் தற்பொழுதும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

கடல் வளங்கள் மற்றும் அதன் சூழலை பாதுகாக்கும் வகையில் கடற்படையினர் தமது அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டின் பல்வேறு கரையோர பகுதிகளிலும் சுமார் 100,000க்கும் அதிகமான கண்டல் தாவரக்கண்றுகளை நாட்டியுள்ளனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்