››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

உலர் உணவு பொருட்கள் விநியோகிக்க இராணுவத்தினர் ஒத்துழைப்பு

உலர் உணவு பொருட்கள் விநியோகிக்க இராணுவத்தினர் ஒத்துழைப்பு

[2018/07/31]

அண்மையில் கிழக்கு பிராந்தியத்திலுள்ள இலங்கை இராணுவத்தினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகளை விநியோகிப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கி உள்ளனர். இதன் பிரகாரம் இப்பிரதேசத்தில் உள்ள வறிய தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் சுமார் 7000 க்கும் அதிகமான உலர் உணவு பொதிகளை புதன்கிழமையன்று (ஜூலை, 25) விநியோகித்துள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

புனித ரமழான் நோன்புப் பெருநாளையிட்டு வறிய குடும்பங்களுக்கு மத்தியில் உலர் உணவுப் பொதிகளை விநியோகிக்க ஆராயம்பதியிலுள்ள எம். சி. ஏ.ஹமீட் ஹஜியார் நம்பிக்கை நிதியம் அனுசரனை வழங்கியுள்ளது.

இந் நிகழ்விற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சாந்துசித பனன்வல பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்