››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிளிநொச்சியில் தேவையுடைய மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு

கிளிநொச்சியில் தேவையுடைய மாணவர்களுக்கு கல்வி ஊக்குவிப்பு

[2018/08/02]

கிளிநொச்சி மாவட்டத்தில் வசிக்கும் குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவினருக்கு கல்வி ஊக்குவிப்புகள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஒன்று அண்மையில் (ஜூலை, 31) இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில், வட்டக்கச்சி அரசினர் தமிழ் கலவன் ஆரம்ப பாடசாலையில் கல்விபயிலும் 48 மாணவர்கள் கல்வி ஊக்குவிப்புக்கான பாடசாலை உபகரணங்களை பெற்றுக்கொண்டதுடன், கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகத்தின் கீழ் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிகளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் கல்விபயிலும் தகுதிதியுடைய மாணவர்களின் கல்வித் தரங்களை மேம்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலை உபகரணங்கள் வழங்குவதற்கான அனுசரணையை வரையறுக்கப்பட்ட கொழும்பு கென்ட் பொறியாளர்கள் தனியார் நிறுவனமான வழங்கியுள்ளது.

 

இதேவேளை, அண்மையில் (ஜூலை, 28) முள்ளிவாய்க்கால் டயர் சந்திக்கு அருகாமையில் உள்ள விளையாட்டு மைதானம் முல்லைத்தீவு இராணுவத்தினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டபின்னர் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, இரண்டு விளையாட்டு கழகங்கள் வருகை தந்ததுடன், நட்பு மற்றும் நல்லெண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு தொகை கரப்பந்துகள், கரப்பந்து வலைகள், கால்பந்துகள், கால்பந்துகணுக்கள் மற்றும் ஏனைய விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றினை இவர்களுக்கு வழங்கி வைப்பதற்கான 14வது விஜயபாகு காலாட்படை படை மற்றும் 9 வது இலங்கை தேசிய படை ஆகியன அனுசரணை வழங்கியிருந்தனர்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்