››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“சிரிசர பிவிசும” திட்டத்தின்கீழ் கருவலகஸ்வெவயைப் பார்வையிட இராணுவத்தளபதி விஜயம்

“சிரிசர பிவிசும” திட்டத்தின்கீழ் கருவலகஸ்வெவயைப் பார்வையிட இராணுவத்தளபதி விஜயம்

[2018/08/05]

தேசத்தை கட்டியெழுப்பும் நோக்குடன் ஜனாதிபதி செயலகத்தின் “சிரிசர பிவிசும” எனும் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் புனர்நிர்மாணம் செய்யப்படும் பன்சல் கொடள்ள கருவலகஸ்வெவ குளத்தின் வேலைத்திட்டங்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்கள் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட், 03) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

160 விவசாய குடும்பங்களுக்கு சொந்தமான சுமார் 188 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்கக்கூடிய இக்குளத்தின் அணைக்கட்டு சுமார் 850 மீட்டர் நீளமும், 12.5 அடி அகலமும் கொண்டதாக காணப்படுகின்றன. இராணுவ பொரியலாளர்கள் நீரின் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில் 25,000 கியூப் மண்ணை குளத்தில் இறுந்து அகற்தறுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இவ் வேலைத்திட்டங்கள் “சிரிசர பிவிசும” அபிவிருத்திதிட்ட குளங்கள் புனரமைப்பு வழிகாட்டல் அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் பிரியந்த திசாநாயக அவர்களின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்