››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கிளிநொச்சி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

கிளிநொச்சி குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்

[2018/08/07]

கிளிநொச்சியில் உள்ள இலங்கை இராணுவ வீரர்களினால் குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்தும் வகையிலான பல்வேறு சமூக நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கமைவாக அண்மையில் (ஆகஸ்ட், 03) குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களுக்கு ஒருதொகை தென்னங்கன்றுகளும் அவற்றிற்கான உரப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இவ் விவசாய ஊக்குவிப்பு முன்னடுப்பானது மீரகம சில்வர் மில் கம்பெனியின் நன்கொடை மூலம் சாத்தியமாகியது. இங்கு இடம்பெற்ற வைபவத்தின் போது தென்னங்கன்றுகளை வளர்க்கும் முறையான பொறிமுறை, உரமிடல் மற்றும் அவற்றை வினைத்திறனாக கையாளுதல் உள்ளிட்ட சிறந்த நடைமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சி ஒன்றும் தெங்கு அபிவிருத்தி சபையின் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டது.

 

இதேவேளை, கிளிநொச்சி,அம்பபுரம் பிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுவனின் இறுதி சடங்குக்கான பணிகள் படைவீரர்களின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது. வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இச்சிறுவன் ஊஞ்சல் ஆடிக்கொண்டிந்த சமயம் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்