››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

8வது 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' இம்மாதம் ஆரம்பம்...

8வது 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு' இம்மாதம் ஆரம்பம்...

[2018/08/07]

இலங்கை இராணுவத்தின் வருடாந்த சர்வதேச பாதுகாப்பு மாநாடான 'கொழும்பு பாதுகாப்பு மாநாடு 2018' பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இம்மாத இறுதியில் இடம்பெறவுள்ளது. இம்மாநாடு தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (ஆகஸ்ட்,07) கொழும்பு, கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது. இரண்டு நாட்களைக் கொண்ட இச் சர்வதேச மாநாடு 'உலகளாவிய இடையூறுகளைக் கொண்டதொரு யுகத்தில் பாதுகாப்பு' எனும் தொனிப்பொருளில் இம்மாதம் 30ம் மற்றும் 31ம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

இப்பாதுகாப்பு மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ள அதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இம்மாட்டின் பிரதான உரையை நிகழ்த்தவுள்ளார். மேலும் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் இம்மாட்டின் அங்குரார்ப்பண உரையாற்றவுள்ளார்.

இவ்வூடகவியலாளர் சந்திப்பிற்கு தலைமைவகித்த இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள், வேகமாக மாறிவரும் உலக ஒழுங்கு மற்றும் இதுபோன்ற சவால்களை எதிர்கொள்ளக்கூடிய வழிகளையும் மூலங்களையும் கூட்டாக மதிப்பீடு செய்யக்கூடிய திறன் கொண்ட இவ் வருடாந்த அரங்கு, உலகம் முழுவதுமுள்ள பாதுகாப்பு பங்காளர்கள், மூலோபாயவாதிகள், கொள்கை வகுப்பாளர்கள், பாதுகாப்பு நிபுணர்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்கள் என பலதரப்பட்டோரினை பெரிதும் ஈர்த்துள்ளதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாகவும் நடைபெறவுள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாட்டிற்கு 100 வெளிநாட்டு பிரதிநிதிகள் உட்பட 800 பாதுகாப்புத் துறைசார் பிரதிநிதிகள் பங்குகொள்வார்கள் என அதன் ஏற்பாட்டாளர்களினால் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், 13 வெளிநாட்டு பேச்சாளர்களும் 14 உள்நாட்டு பேச்சாளர்களும் இம்முறை பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றவுள்ளனர். அத்துடன் சார்க் நாடுகளைச் சேர்ந்த இராணுவ உயரதிகாரிகளுக்கும் இம்மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

இம்மாநாட்டில், 'மக்கள் தொகை மாற்றமும் பாதுகாப்பு மீதான தாக்கங்களும்', 'தொழில்நுட்ப இடையூறுகள்','மனித தலையீடு காரணமான காலநிலை மாற்றம்' மற்றும் 'அரசியல் தீவிரவாதம் ' ஆகிய தொனிப்பொருள்களுக்கு அமைவாக 'மனித காரணிகள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு', 'உள்நாட்டு இடப்பெயர்வின் உலகளாவிய சவால்', '21 ஆம் நூற்றாண்டில் நகர்ப்புற பாதுகாப்பு', 'இணைய முறண்பாடுகள் & எதிர்கால சக்தி', 'சமூக ஊடகங்களும் நம்பகத்தன்மையும்: உலகளாவிய பாதுகாப்பு சவால்கள்', 'செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி ஆயுதங்கள்', 'பிரதிபலிப்பு ; தணிப்பதற்கான உத்திகள் (பிராந்திய முன்னோக்கு) இராணுவத்தின் பங்கு', இராணுவம் தொடர்பான விழிப்புணர்ச்சி மற்றும் உத்திகள் (உலகளாவிய முன்னோக்கு) ',' காலநிலை பூகோள இயந்திரவியல்: சவால்கள் & வாய்ப்புகள் ',' வன்முறை அல்லாத அரசு விகிபாகம் ', ' காலநிலை மாற்றம்: போர் எதிர்கால 'மற்றும்' வன்முறை தீவிரத்தை குறைப்பதில் தலைமைத்துவம் ', ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன

இந்த ஆண்டு நிகழ்வில் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பிரேசில், பங்களாதேஷ், போட்ஸ்வானா, சிலி, கனடா, எகிப்து, ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், இத்தாலி, கென்யா, கொரியா, மாலைத்தீவுகள், மொசாம்பிக், நெதர்லாந்து, நைஜீரியா, நைஜர், நோர்வே, நேபாளம், பிலிப்பைன்ஸ், ருவாண்டா, ரஷ்யா,சவுதி அரேபியா, செனகல், ஸ்பெயின், ஸ்வீடன், சூடான், தெற்கு சூடான், தான்சானியா, பிரித்தானியா, உக்ரைன், அமெரிக்கா, வியட்நாம், சாம்பியா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.

கடந்த வருடம் (2017) 'வன்முறை மிக்க தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல்: உலகளாவிய போக்குகள்' எனும் தொனிபொருளில் இரண்டு நாட்கள் நடைபெற்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் 35 நாடுகளைச் சேர்ந்த 77 வெளிநாட்டு பிரதிநிதிகள் அடங்கலாக 800 பாதுகாப்பு துறைசார் நிபுணர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்