››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

தலதா மாளிகையில் தீயணைப்பு பிரிவு ஸ்தாபிப்பு

தலதா மாளிகையில் தீயணைப்பு பிரிவு ஸ்தாபிப்பு

[2018/08/08]

இலங்கை விமானப்படையினரால் அமைக்கப்பட்ட சகல வசதிகளையும் உள்ளடக்கிய தீயணைப்பு பிரிவினை வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு இன்று (ஆகஸ்ட், 08) இடம்பெற்றது. இன்று காலை கண்டி தலதா மாளிகையில் வைத்து குறித்த தீயணைப்பு வாகனம் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் தியவதன நிலமே பிரதீப் நிலங்க டெலவிடம் வைபவ ரீதியாக ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வின் போது தலதா மாளிகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவை ஸ்தாபிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது. குறித்த இத்திட்டம் தலதா மாளிகை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய செயல்படுத்தப்பட்டது.

மூன்று கட்டங்களில் ஸ்தாபிக்கப்பவுள்ள இத்திட்டத்தில் முதலாவதாக தற்போதுள்ள அமைப்புகளின் முழுமையான கணக்கெடுப்பு மற்றும் குறைபாடுள்ள குழாய் அமைப்பு மற்றும் பம்புகளை சீரமைத்தல், முதல் உதவி தீ உபகரணங்களை மேம்படுத்துதல், விழிப்புணர்வு, பயிற்சி மற்றும் தரநிலை இயக்க நடைமுறைகள் அறிமுகப்படுத்துதல் ஆகியவை உள்ளடங்குகின்றன. இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டமானது மாளிகைக்கும் அதன் சுற்றுப்புறங்களுக்கும் ஒரு விரிவான தீ மற்றும் மீட்புத் திட்டத்தினை உருவாக்குதல் ஆகும்.

இறுதி கட்ட திட்டமானது தீ தடுப்பு முறையில் நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்டறிதல் மற்றும் வெள்ள அனர்த்த முகாமை அமைப்பு ஆகியவற்றை நிறுவுதல் உள்ளிட்ட விரிவான திட்டத்தை உள்ளடக்கியது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்