››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் நினைவுப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் நினைவுப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

[2018/08/08]

இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் நினைவுப் பேருரையில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பத்தரமுல்ல ஸுஹுரூபாய கேட்போர் கூடத்தில் இன்று (ஆகஸ்ட்,08) இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னஅவர்களின் பாரியார் திருமதி. மானெல் விமலரத்ன மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேஜர் ஜெனரல் ஜி.டி.டி.யு.ஏ பெரேரா "மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் மரபுரிமை மற்றும் ஒரு தொழில்முறை இராணுவத்திற்கான அவரது பார்வை" எனும் தொனிப்பொருளில் நினைவுப் பேருரை நிகழ்த்தினார்.

இந்நினைவுப்பேருரையின் ஒரு அங்கமாக மறைந்த போர் வீரர் தொடர்பான விளக்கவுரை அடங்கிய காணொளி ஒன்று பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. மேலும் இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. அசங்க அபேகுணசேகர அவர்களினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது.

யாழ்ப்பாண தீபகற்பத்தில் ஊர்காவற்துறை தீவு, அராலி பொயின்டில் இடம்பெற்ற தாக்குதலின் போது மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஐ.வீ.கே.எம். விமலரத்ன, ஆர்டபிள்யூபி, ஆர்எஸ்பீ., பிஎஸ்சி., மற்றும் மேஜ் ஜெனரல் டென்ஸில் கோபெகடுவ உட்பட பல அதிகாரிகள் உயிரிழந்தார். இத்துயர சம்பவம் 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 08 ஆம் திகதி சரியாக 26 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றது. உயிரிழக்கும் போது அவர் யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தளபதியாக செயற்பட்டார்.

கொழும்பு ரோயல் கல்லூரியின் பழைய மாணவரான மேஜர் ஜெனரல் விமலரத்னஅவர்கள், 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கை இராணுவத்தில் பயிலுனர் அதிகாரியாக இணைந்தார். அவரது இராணுவ வாழ்க்கையின் போது, ​​கஜபா படைப்பிரிவின் வளர்ச்சிக்காக பெரிதும் முன்னின்று உழைத்தார். அத்துடன் அவர் கெமுனு வாட்ச் மற்றும் கஜபா ரெஜிமென்ட் உள்ளிட்ட பல ரெஜிமண்ட்களுக்கான கட்டளையதிகாரியாக செயற்பட்டுள்ளார். வடமராட்சி மற்றும் வடபிராந்தியத்தில் இடம்பெற்ற இதர இராணுவ நடவடிக்கைகளின் போது மேஜர் ஜெனரலின் பங்கு அளப்பரியது. மேலும் அவர் ரண விக்ரம பதக்கம் , ரண சூர பதக்கம் மற்றும் வடமராட்சி செயல்திட்ட பதக்கம் உட்பட பல பதக்கங்களை அவர் பெற்றுள்ளார்.

இந்நினைவுப்பேருரை நிகழ்வில் முன்னாள் இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்