››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 26வது ஞாபகார்த்த தினம் அனுராதபுரத்தில் அனுஷ்டிப்பு

லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 26வது ஞாபகார்த்த தினம் அனுராதபுரத்தில் அனுஷ்டிப்பு

[2018/08/09]

அரலி முனையில் இடம்பெற்ற துயர சம்பவத்தின் போது உயிர்த்தியாகம் செய்த நாட்டின் புகழ்பெற்ற சமகால போர் வீரர்களில் ஒருவரான மறைந்த, லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 26வது ஞாபகார்த்த தினம் அனுராதபுரத்தில் நேற்றய தினம் (ஆகஸ்ட்,8) அனுஷ்டிக்கப்பட்டது.

ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் 26வது ஞாபகார்த்த தினம் அன்னாரின் உருவச்சிலை அமைந்துள்ள பகுதியில் திருமதி லலி கொப்பேகடுவ, அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதல்களுடன் இடம்பெற்றதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹா சங்கத்தின் ஆசீர்வாதத்துடன், மறைந்த போர் வீரரான ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் நினைவுச் சின்னத்தில் மலர் மாலைகள் வைக்கப்பட்டன.

நாட்டின் புகழ்பெற்ற சமகால போர் வீரர்களில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் கொப்பேகடுவ அவர்களுடன் இணைந்து மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன மற்றும் இவர்களுடன் சென்றிருந்த ரியர் அட்மிரல் மொஹான் ஜயமக, லெப்டினன்ட் கேணல் எச். ஆர். ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜீ. எச். ஆரியரத்ன, லெப்டினன்ட் கேணல் வை. என். பலிபன, கொமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன்ட் கொமாண்டர் சி.பி. விஜேபுர, இராணுவ சிப்பாய் டபிள்யூ.ஜே. விக்கிரமசிங்க ஆகியோர் 1992ம் ஆண்டு ஆகஸ்ட் 08ம் திகதி யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் உள்ள அரலி முகாமிற்கு இராணுவ முன்னெடுப்புகள் தொடர்பாக ஆராய சென்றவேளை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.

மறைந்த, லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்கள் கண்டி புனித திரித்துவ கல்லூரியின் பழைய மாணவராவார். 1960ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்ட ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்கள், தனது ஆரம்ப கட்ட பயிற்சி நெறியினை இராணுவ பயிற்சி நிலையத்தில் பூர்த்தி செய்த பின்னர் மேலதிக பயிற்சிக்காக பிரித்தானியாவில் உள்ள சேன்டர்ஸ்ட் இராணுவ அகடமிக்கு சென்றார். 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி இலங்கை கவசப் படையணியின் இரண்டாம் நிலை லெப்டினனாக ஆணையதிகாரம் அளிக்கப் பெற்றார்.

மேலும், ஜெனரல் கொப்பேகடுவ அவர்கள் நாட்டில் நிலவிய பயகரவாதத்திற்கெதிராக இலங்கை இராணுவம் பல வெற்றிகளைப் பெற காரண கருத்தாவாக இருந்தார். வட பகுதியில் இடம் பெற்ற ஆரம்ப கட்ட ஈழப் போர்களுக்கெதிராக இலங்கை இராணுவம் பல வெற்றிகளைப் பெற காரண கருத்தாவாக அமைந்தார். இதனால் அவர் பல வீர பதக்கங்களுக்கு சொந்தக்காரராக திகழ்ந்தார்.

இந்நிகழ்வில் இலங்கை கவச படையணியின் கேணல் கொமடான் மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்