››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இலங்கை போக்குவரத்து சபை வேண்டுகோளுக்கு அமைய 44 பேருந்துகள் தயார் நிலையில்

இலங்கை போக்குவரத்து சபை வேண்டுகோளுக்கு அமைய 44 பேருந்துகள் தயார் நிலையில்

[2018/08/09]

ரயில்வே ஊழியர்கள், தொழிற்சங்க பிரச்சினைகளினால் உடனடி வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதையடுத்து பொதுமக்கள் எதிர்கொண்டுள்ள போக்குவரத்து அசௌகரியங்களை தடுக்கும் வகையில் இலங்கை போக்குவரத்து சபை விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இராணுவ தளபதி அவர்களின் அறிவுறுத்தல்களுக்கேற்ப இலங்கை இராணுவத்த்திற்கு சொந்தமான பேருந்துகள் பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இராணுவ வீரர்களினால் நிர்வகிக்கப்படும் அப் பேருந்துகளில், காலி, கண்டி, சிலாபம், குருநாகல், நிட்டம்புவ, ரம்புக்கன, மீரிகாமா, வேயங்கொட, கிரிலியல்ல, கம்பஹா, கணேமுல்ல மற்றும் பொல்கஹவெல ஆகிய பிரதேசங்களுக்கான பயணத்தினை பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இலவசமாக மேற்கொள்ள முடியும்.

இதேபோல், 44 இராணுவ பேருந்துகள் இலங்கை போக்குவரத்து சபையின் வேண்டுகோளுக்கு அமைவாக பொது போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து அவர்கள் தெரிவித்துள்ளார்.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்