››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கடற்படையினர் நிர்மாணித்த குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் பாலாவிய மக்களிடம் கையளிப்பு

கடற்படையினர் நிர்மாணித்த குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் பாலாவிய மக்களிடம் கையளிப்பு

[2018/08/15]

இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் சமூக நலன்புரி நடவடிக்கைகளுக்கு அமைய நிறுவப்பட்ட குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் கல்பிட்டிய - பாலாவிய தளுவ பிரதேச மக்களிடம் நேற்று (ஆகஸ்ட், 14) கையளிக்கப்படட்டுள்ளது. 419 ஆக நிறுவப்பட்ட இக் குடி நீர் சுத்திகரிப்பு நிலையமானது, இலங்கை கடற்படையின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான பிரிவின் முயற்சியால் நிறுவப்பட்டு மக்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறுநீரக நோய் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் ஒருங்கிணைப்புடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வழிகாட்டலுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் இத்திட்டத்தின் மூலம் சிறுநீரக நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு சுத்தமான குடிநீரை வழங்கும் வகையில் இந்நிலையங்களை நிறுவி வருகின்றனர்.

தளுவ சுமனராமைய வளாகத்தில் நிறுவப்பட்ட இப்புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினூடாக இப்பிரதேச மக்களுக்கு தேவையான சுத்தமான குடிநீர் தேவையினை நிறைவு செய்யமுடியும் என்பதாக தெரிவிக்கப்படுகிறது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்