››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

சேவா வனிதா பிரிவின் தலைவி அனுராதபுர அபிமன்சலவிற்கு விஜயம்

சேவா வனிதா பிரிவின் தலைவி அனுராதபுர அபிமன்சலவிற்கு விஜயம்

[2018/08/16]

பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. ஷாலினி வைத்தியரத்ன அவர்கள் அனுராதபுர அபிமன்சலவிற்கு நேற்றய தினம் (ஆகஸ்ட், 15) விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

அபிமன்சல என அழைக்கப்படும் வீட்டுத்தொகுதியில் மனிதாபிமான நடவடிக்கையின்போது தமது அவயவங்களை இழந்த மாற்றுத்திறனாளிகளான படைவீரர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.

இவ்விஜயத்தின் போது திருமதி. வைத்தியரத்ன அவர்கள், மாற்றுத்திறனாளிகளான படைவீரர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி அவர்களின் நலன்களை கேட்டறிந்து கொண்டார்.

மேலும் அபிமன்சலவின் அதிகாரிகளுடன் இங்கு தங்கியுள்ள வீரர்களுக்கு அளிக்கப்படும் சேமலாப நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பாகவும் சேவா வனிதா பிரிவின் தலைவி அவர்கள் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்