பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில்
மீளாய்வுக் கூட்டம்
[2018/08/20]

பாதுகாப்பு அமைச்சின் வேலை
திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் தலைமையில் இன்று (ஆகஸ்ட், 20)
இடம்பெற்றது. பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திரு. சுனில் சமரவீர
அவர்களும் கலந்துகொண்டார்.
இதன்போது, பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் முன்னேற்றம் மற்றும்
மதிப்பீடு தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில், பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் ரணவிரு சேவா அதிகாரசபை, பாதுகாப்பு
சேவைகள் கட்டளை மற்றும் பணியக கல்லூரி, ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலை
பாதுகாப்பு பல்கலைக்கழகம், தேசிய மாணவர்சிப்பாய் படையணி மற்றும் பாதுகாப்பு
சேவைகள் கல்லூரி ஆகியவற்றின் பிரதானிகள் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சின் அதிகாரிகள், முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
|