››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

“2018 கஜபா சுப்பர்குரொஸ்” நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்து சிறப்பிப்பு

“2018 கஜபா சுப்பர்குரொஸ்” நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கலந்து சிறப்பிப்பு

[2018/08/20]

அனுராதபுர சாலியபுரவில் நேற்று (ஆகஸ்ட், 19) இடம்பெற்ற 2018ஆம் ஆண்டிற்கான கஜபா சுப்பர்குரொஸ் மோட்டார் ஓட்டப் போட்டி நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார். இராணுவத்தின் கஜபாப் படைத்தலைமையகத்தின் 18 ஆவது ஆண்டு நிறைவை இட்டு இலங்கை ஒட்டோ ஸ்போர்ஸ்ட் ரைவர்ஸ் கழகத்தினரின் ஒத்துழைப்புடன் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்விற்கு, பிரதம அதிதியாக கலந்து கொண்ட பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் வரவேற்றுள்ளார்.

இதன்போது, காலஞ்சென்ற மேஜர் ஜெனரல் காமினி குணசேகர அவர்களின் நினைவுத் துபி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது

இவ்வருடம் 200க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் 24 நிகழ்வுகளில் தமது திறமை மற்றும் ஆற்றல்களையும் வெளிக்காட்டியுள்ளனர்.
இந்நிகழ்வில், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பந்தய ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்