››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ஜப்பானிய கடற்படை கப்பல் இலங்கை வருகை

ஜப்பானிய கடற்படை கப்பல் இலங்கை வருகை

[2018/08/20]

ஜப்பானிய கடல்சார் தற்பாதுகாப்பு படைக்கு சொந்தமான கடற்படை கப்பல் இன்று (ஆகஸ்ட், 20) இலங்கை வந்தடைந்துள்ளது. “இகாசுச்சி” எனும் ஜப்பானிய கடற்படை கப்பலே இவ்வாறு மூன்று நாள் உத்தியோகபூர்வ நல்லெண்ண விஜயமொன்றினை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

கிழக்கு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

இக்கப்பலில் வருகைதந்த சிப்பந்திகள் இலங்கையில் தரித்திருக்கும் வேளையில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்குகொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்