ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2018/08/21]

ஜப்பானிய பாதுகாப்பு
அமைச்சர் கெளரவ. இட்சுனோரி ஒனோடேரா அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 21) சந்தித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில்
இடம்பெற்ற இச்சந்திப்பின்போது ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இலங்கை
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில் சுமூக கலந்துரையாடல் ஒன்று
இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கைக்கான
ஜப்பான் தூதுவர் திரு. கெனிச்சி சுகனுமா, மேலதிக செயலாளர் – பாராளுமன்ற
அலுவல்கள், கொள்கை மற்றும் திட்டமிடல், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி,
இராணுவ மற்றும் விமானப்படை தளபதிகள், கடற்படை அதிகாரிகளின் பிரதானி, கடலோர
பாதுகாப்புப்படை பணிப்பாளர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும்
கலந்துகொண்டனர்.
இலங்கைக்கான இரண்டு நாள்
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் நேற்று
மாலை வந்தடைந்தார். ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம்
செய்துள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
|