இந்திய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
[2018/08/27]

மேஜர் ஜெனரல் எஸ்சி மொகாந்தி அவர்களின் தலைமையிலான
இந்திய தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஆகஸ்ட், 27)
சந்தித்தனர்.
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இந்திய
தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பிரதிநிதிகள் குழு மற்றும் பாதுகாப்பு
இராஜாங்க அமைச்சர் ஆகியோருக்கிடையில் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த
விடயங்கள் தொடர்பாக சினேகா பூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றதுடன்
அவர்களுக்கிடையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் பாதுகாப்பு
நடவடிக்கைகளுக்கான மேலதிக செயலாளர் திரு. ஆர்எம்எஸ் சரத் குமார, இராணுவ
இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் டிஏஆர் ரணவக்க மற்றும் இந்திய தூதரகத்தின்
பாதுகாப்பு ஆலோசாகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
|