››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் விஷேட சந்தை

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் விஷேட சந்தை

[2018/08/27]

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 'விரு தெடட அத மிட சரு' விஷேட ஒரு நாள் சந்தை பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் இன்று(ஆகஸ்ட்,27) இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் ஒய்வு பெற்ற இராணுவ வீரர்களுக்கு விவசாய சுய தொழில் நடவடிக்கைகளை ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இச்சந்தை இடம்பெற்றது.

இச்சந்தையில், ஒய்வு பெற்ற இராணுவ வீரர்களினால் உற்பத்தி செய்யப்பட காய்கறிகள், பழங்கள், உள்நாட்டு அரிசி வகைகள், மாவு மற்றும் பருப்புவகைகள்,சுத்தமான தேன், பண்ணை உற்பத்திப்பொருட்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் என்பன நியாயமான விலையில் விற்பனை செய்யப்பட்டன.

இச்சந்தையினை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்ற விவகாரங்கள், கொள்கை & திட்டமிடலுக்கான மேலதிக செயலாளர் திரு. ஆர்பீஆர் ராஜபக்ஷ, முப்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஓய்வுபெற்ற படைவீரர்களுக்கான விவசாய சுய வேலைவாய்ப்பு திட்டம், ஓய்வுபெற்ற படைவீரர்களின் ஓய்வூதியத்திற்கு மேலதிகமாக கூடுதல் வருவாயை அளிப்பதோடு தேசிய மனிதவள கோரிக்கைகளை பூர்த்தி செய்ய அவர்களது நிபுணத்துவத்தை தக்கவைத்துக்கொள்ளவும் உதவுகிறது. இதன் மூலம் அவர்கள் தேசிய அபிவிருத்திக்கும் பங்களிப்பு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

     செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்