››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

ரஷ்யாவில் இடம்பெற்ற ஸ்பஸ்காயா டவர் சர்வதேச இராணுவ பேண்ட் வாத்திய இசை விழாவில் பங்கேற்பு

ரஷ்யாவில் இடம்பெற்ற ஸ்பஸ்காயா டவர் சர்வதேச இராணுவ பேண்ட் வாத்திய இசை விழாவில் பங்கேற்பு

[2018/09/06]

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற ஸ்பஸ்காயா டவர் சர்வதேச இராணுவ பேண்ட் வாத்திய இசைப்பு போட்டிகளில் இலங்கை இராணுவத்தின் பேன்ட் வாத்தியக் குழுவும் பங்கு பங்குபற்றியதுடன் அப்போட்டியில் நான்காவது இடத்தை பெற்றுகொண்டது. இவ்விராணுவ குழுவில் முப்படைவீரர்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 படைவீரர்கள் கலந்துகொண்டனர். மிகவும் பிரபல்யம்வாய்ந்த ஜனரஞ்சக நிகழ்வான ஸ்பஸ்காயா டவர் கலைவிழா ஆகஸ்ட் மாதம் 24ம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 02ம் திகதிவரை இடம்பெற்றது.

ட்டிகளில் ஐக்கிய ராச்சியம், நெதர்லாந், மியன்மார், இஷ்ரேல், இத்தாலி, ஓமான்,மொனாகோ, ரஷ்யா, பின்லாந்து மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகள் உள்ளடங்கலாக சுமார் 11நாடுகளைச் சேர்ந்த சுமார் 40 இராணுவ பேன்ட் வாத்திய அணிகள் பங்கேற்றனர்.

விழாவின் போது, தலைநகர் மொஸ்கோவின் பொது இடங்களில் வாத்திய இன்னிசை வழங்குவதற்காக இலங்கை இராணுவக் குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதுடன் அவர்கள் யரோஸ்லாவ்ஸ்கி இரயில் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை (01, செப்டம்பர்) வாத்திய இசை வழங்கினர். பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்ற இவ் விழாவினைக் காண பெருந்தொகையாக பார்வையாளர்கள் அங்கு வருகை தந்திருந்தனர்.

விழாவின் போது ரெட் சதுக்கத்தில் அறிமுகமான அவர்கள் மொனாக்கோ மற்றும் ஐக்கிய ராச்சியத்துக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தை பிடித்துள்ளனர். நெதர்லாந்தின் கிரெஸ்கெண்டோ சைஸ் ஷோட் பேண்ட் சிறந்த இசைக்குழுவாக தெரிவு செய்யப்பட்டது.செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்