››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'நீர்க்காக கூட்டு பயிற்சி IX- 2018' நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

'நீர்க்காக கூட்டு பயிற்சி IX- 2018' நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு

[2018/09/12]

இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 9வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு, இம்மாதம் வியாழக்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்ட கள முனை போர் பயிற்சியான 'நீர்க்காக கூட்டு பயிற்சி - IX' நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகிறன.

இவ்வருடம் இடம்பெறும் இக்கூட்டுப் பயிற்சியில் 2500 இராணுவ வீரர்கள், 400 கடற்படை வீரர்கள், 200 விமானப்படை வீரர்கள் மற்றும் 100 வெளிநாட்டு இராணுவ வீரர்களும் பங்கேற்கின்றனர். இப்பயிற்சி நடவடிக்கைகளில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், நைஜீரியா, பாக்கிஸ்தான், ரஷ்யா, சிங்கப்பூர், சூடான், துருக்கி, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளின் பாதுகாப்புப் படைவீரர்கள் மற்றும் அவதானிகள் ஆகியோர் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டு பயிற்சி நடவடிக்கைகளின் ஒருபகுதியாக ரயிலிலிருந்து “கிளர்ச்சியாளர்” களை கைதுசெய்யும் நடவடிக்கையினை வெலிகந்தை புகையிரத நிலையத்தில் மேற்கொண்டுள்ளனர். இப்பயிற்சியில் வெளிநாட்டு படையினர் உட்பட நகர்ப்புற சண்டைக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதுடன், இதற்கான ஒத்துழைப்புக்களை விஷேட படையணியின் ரைடர் அணியினர் வழங்கியுள்ளனர்.

மேலும் நேற்று (11) இடம்பெற்ற இக்கூட்டுப் பயிற்சியில் கல்பிட்டிய நந்ததீவில் தீவிரவாத குழுவினரால் பணயக்கைதியாக வைத்திருந்த இரு வெளிநாட்டவர்களை பாதுகாப்பாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது கொமாண்டோ படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இன் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

இக்கூட்டுப் பயிற்சியானது இம்மாதம் (செப்டம்பர்) 26 ஆம் திகதி குச்சவெளி பிரதேசத்தில் “விமர்சன ஈடுபாட்டுடன்” நிறைவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்