››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு இன்று ஆரம்பம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு இன்று ஆரம்பம்

[2018/09/13]

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பதினோராவது சர்வதேச ஆய்வு மாநாடு பாதுகாப்பு பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இன்று (செப்டெம்பர், 13) ஆரம்பமானது. இரு நாட்களைக்கொண்ட இவ் ஆய்வரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் பிரம அதிதியாக கலந்துகொண்டார்.

வருடாந்தம் இடம்பெறும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு இம்முறை பதினோராவது தடைவாக இடம்பெறுகின்றது. இம்மாநாடு பல்வேறு நிபுணதத்துவம் வாய்ந்த வல்லுநர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தமது தரம்வாய்த ஆய்வு முடிவுகளை முன்வைக்கும் ஒரு உலகத் தரம்வாய்த மன்றமாகும். “ஒத்துழைப்பு மூலம் தொழில் நுட்ப திறனை பாதுகாத்தல்" எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் இவ்வருட ஆய்வு அரங்கு இன்றும் நாளையும் இடம்பெறுகின்றது. இவ்வருட ஆய்வு அரங்கில் பெருமளவிலான வெளிநாட்டு ஆய்வாளர்கள் பங்கேற்கின்றனர். அத்துடன் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 600ற்கு மேற்பட்ட ஆய்வு அறிக்கைகள் ஆய்வுக்காக சமர்பிக்கப்பட்டுள்ளன.

அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய பாதுகாப்பு செயலாளர் அவர்கள், ஒழுக்கம் மிகுந்த சூழலில் மூன்றாம் நிலை கல்வியை வழங்குவதில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் முக்கிய பங்கு வகிகின்றது. நாட்டில் உயர் கல்வி வழங்குவதில் சிறப்புத்தன்மை காணப்படுவதற்கு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் இச் சர்வதேச ஆராய்ச்சி மாநாடு ஒரு சிறந்த சான்றாகும் என தெரிவித்தார். ஆய்வுகளை பிரபல்யப்படுத்துவதில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வகிபாகத்தை பாராட்டியதுடன் நாட்டின் வளர்ச்சிக்கு ஆராய்ச்சிகள் இன்றியமையாத ஒன்றாகும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் அவர், புதிய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் தருணங்களில் அதற்கு ஈடுகொடுக்கும் வகையிலும் அவற்றிற்கு விடை தேடும் வகையிலும் மாநாட்டின் தொனிப்பொருள் அமையப்பெற்றுள்ளது. எதிர்கால தலைமுறையினரின் நலன்களுக்காக நாட்டின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார வளர்ச்சியை ஏற்படுத்த நாட்டிலுள்ள அனைத்து நிபுணர்களும் ஒன்றிணைந்து பணிபுரியும் நேரம் இதுவாகும் எனக்குறிப்பிட்டார்.

பேராசிரியர் மொஹான் முனிசிங்க அவர்களினால் பிரதான உரை நிகழ்த்தப்பட்டது. சிறப்பு உரை கலாநிதி. சரத் குணபால அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. தமது துறைகளில் ஆய்வு மற்றும் நிபுணத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் , இரு பேச்சாளர்களுக்கும் விழாவின் போது கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் கௌரவபேராசிரியர்கள் எனும் கௌரவ விருது வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஓய்வுபெற்ற அட்மிரல் தயா சந்தகிரி , கடற்படைத்தளபதி, உப வேந்தர்கள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அதிதிகள், பல்கலைக்கழக அதிகாரிகள், கல்விமான்கள், மற்றும் பயிலும் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     
     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்