››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

'நீர்க்காக கூட்டு பயிற்சி IX- 2018' யில் படையினர் எதிரிகளின் மறைவிடங்களை சோதனை

'நீர்க்காக கூட்டு பயிற்சி IX- 2018' யில் படையினர் எதிரிகளின் மறைவிடங்களை சோதனை

[2018/09/17]

முப்படையினரும் இணைந்த வருடாந்தம் மேற்கொள்ளும் கள முனைப் பயிற்சியான ‘நீர்க்காக தாக்குதல்– IX 2018’ கடந்தவாரம் ஆரம்பிக்கப்பட்டு மும்முரமாக தற்பொழுதும் முன்னெடுக்கப்பட்டுவருகிறது.

கடந்த சில நாட்களாக கிழக்கு பிராந்தியத்தின் தொப்பிகளை மற்றும் மின்னேரியா -கல்ஓயா பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டுவந்த இக்களமுனை தாக்குதல் பயிற்சியின்போது, எதிரிகளின் மறைவிடங்களை சோதனை செய்து தாக்குதல்களை மேற்கொள்ளும் பயிற்சியில் உள்ளூர் படைவீரர்கள் உட்பட வெளிநாட்டு பங்கேற்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

தொப்பிகலயில்14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெற்ற இப்பயிற்சியில் சூடான் இராணுவ வீரர்கள் மற்றும் நான்கு இலங்கை விஷேட படை வீரர்கள் பங்கேற்றதுடன், மின்னேரிய – கல்ஓயா காட்டுப்பகுதிகளில் எதிரிகளை மறைந்திருந்து தாக்கும் பயிற்சிகள் செப்டெம்பர் 15 ஆம் திகதி இடம் பெற்றது. கொமாண்டோ படையணியின் வீரர்கள் மற்றும் இந்தோனேசியா இராணுவ வீரர்கள் உட்பட இரண்டு வள்ளங்களும் இப்பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன.

இதேவேளை, கடந்த 13ஆம் திகதி பானம பிரதேசத்தில் இடம்பெற்ற கள முனைப் பயிற்சியில் இலங்கை விமானப்படையின் உதவியுடன் எதிரிகளின் மறைவிடங்களை சோதனை செய்து தாக்குதல்களை மேற்கொள்ளும் பயிற்சியில் கொமாண்டோ படையினர் மற்றும் விஷேட படையணியினருடன் இணைந்து பங்களதேஷிய படை வீரர்களும் மேற்கொண்டிருந்தனர். மேலும், குச்செவெளி கடற்கரை பகுதியில் இடமெற்ற கள முனைப் பயிற்சியில் எதிரிகளின் மறைவிடங்களை சோதனை செய்து தாக்குதல்களை மேற்கொண்டு அதனை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை பாகிஸ்தான் படைவீரர்களுடன் இணைந்து மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக 9வது முறையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு, இம்மாதம் வியாழக்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்ட இக்கூட்டுப் பயிற்சியில் 2500 இராணுவ வீரர்கள், 400 கடற்படை வீரர்கள், 200 விமானப்படை வீரர்கள் மற்றும் 100 வெளிநாட்டு இராணுவ வீரர்களும் பங்கேற்கின்றனர். இப்பயிற்சி நடவடிக்கைகளில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பிரேசில், சீனா, பிரான்ஸ், ஜப்பான், இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, நேபாளம், நைஜீரியா, பாக்கிஸ்தான், ரஷ்யா, சிங்கப்பூர், சூடான், துருக்கி, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளின் பாதுகாப்புப் படைவீரர்கள் மற்றும் அவதானிகள் ஆகியோர் பங்கேற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

     



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்