››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

இராணுவ பரா மெய்வல்லுனர் – 2018 ஆம் ஆண்டிற்கான போட்டி முடிவுகள்

இராணுவ பரா மெய்வல்லுனர் – 2018 ஆம் ஆண்டிற்கான போட்டி முடிவுகள்

[2018/09/22]

இலங்கை இராணுவ பரா மெய்வல்லுனர் 2018 ஆம் ஆண்டிற்கான இறுதிப் போட்டிகள் செப்டெம்பர் மதாம் (21) ஆம் திகதி ஹோமாகமையில் உள்ள தியகம விளையாட்டங்கில் முடிவுற்றது. இப் போட்டியில் ஏறக்குறைய 700 க்கும் அதிகமான அவயங்களை இழந்த இராணுவ விளையாட்டு வீர்ர்கள் பங்கு பற்றினர்.

இராணுவ பரா மெய்வல்லுனர் - 2018 போட்டியானது இப் போட்டியானது இராணுவத்தில் அனைத்து படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி அனைத்து விளையாட்டு வீரர்களின்’ பங்களிப்புடன் செப்டெம்பர் மதாம் 19 ஆம் திகதி தொடக்கம் 21 ஆம் திகதி வரை இடம் பெற்றது.

இப் போட்டி நிகழ்விற்கு பிரதான அதிதியாக இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின் அழைப்பை ஏற்று பாதுகாப்பு பிரதாணியான அத்மிரால் ரவிந்ர விஜேகுணரத்ன அவர்கள் கலந்து கொண்டதுடன் இப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிப் பெற்ற வீரர்களுக்கு சான்றிதல்களும் வெற்றிக் கிண்ணமும் அவர்களால் வழங்கப்பட்டன.

இப் போட்டியை பார்வையிட வருகை தந்த பிரதான அதிதிகளான இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க மற்றும் பாதுகாப்பு பிரதாணியான அத்மிரால் ரவிந்ர விஜேகுணரத்ன உட்பட சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை வரவேற்கப்பட்டதின் பின்னர் பிரதான மேடைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

இது வரையிலும் இராணுவ பரா மெய்வல்லுனர் போட்டிகளில் கூடைப் பந்தாட்டம், பெட்மின்டன், சைக்கிளோட்டம், சக்கர நாற்காலி, மரதன், வில் ஏய்தல், கரப்பந்தாட்டம், கடற்கரை கரப்பந்தாட்டம், மேசைப் பந்தாட்டம், கிரிக்கட், நீச்சல், சக்கர நாற்காலி, துப்பாக்கிச் சுட்டுப் போன்ற போட்டிகளும் இடம்பெற்றுள்ளனர்t.

நன்றி:army.lk



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்