››› முன்பக்கம்    

+ பெரிதாக்க | - சிறிதாக்க  பிரசுரிப்பு | உங்கள் கருத்து

யாழ் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

யாழ் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு

[2018/09/19]

யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் குழுவினருக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு அண்மையில் (செப்டம்பர், 16) இடம்பெற்றுள்ளது. குறைந்த வருமானம்பெரும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு உதவும் வகையில் இராணுவத்தினர் அவர்களின் திட்டத்தில் ஒரு பகுதியாக இதனை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, நன்கொடையாலரினால் அன்பளிப்பு செய்யப்பட 22 துவிச்சக்கர வண்டிகளும் மாணவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இவ் உன்னத செயலானது, இத் தீபகற்பத்தின் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாடசாலைகளுக்கும் வீடுகளுக்கும் இடையே தமது போக்குவரத்தினை மேற்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும். இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் மூலம் இப்பிராந்தியத்தில் இதுவரைக்கும் சுமார் 500 துவிச்சக்கர வண்டிகள் மாணவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

இத்துவிச்சக்கர வண்டிகளை பெற்றுக்கொள்ள தகுதியான மாணவர்கள், உரிய பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரின் உறுதிப்படுத்தலின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில், யாழ்ப்பாண பாதுகாப்பு படை தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.

கடந்த வாரம் (செப்டம்பர்) 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் 51 பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனெரல் ரொஷான் செனவிரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டு நாளாந்தம் 1100 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இராணுவ பவுசர்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக இராணுவ முகாம்களில் உள்ள கிணறுகள் பயன்படுத்தப்படுகிறது.



செய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்

உங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்